பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

95

புலமை யில்லார்க்கும் பொருள் விளங்குமாறு, இயன்ற வரை அமைந்திருப்பதும்,

எளிய இனிய ஒழுகிசை நடையில்

பெரியபுராணச் சிறப்பாகும்.

தக்கயாகப் பரணி

இது 2ஆம் இராசராசன் (கி.பி. 1146-63) விருப்பப்படி, அவன் வேத்தவைப் புலவராயிருந்த ஒட்டக்கூத்தரால், தக்கன் சிவ பெருமானை அவமதித்துச் செய்யப்புகுந்த வேள்வியை வீரபத்திரத் தேவர் அழித்து, அவனுக்கு உதவிபுரிய வந்த தேவரையெல்லாம் வென்று அவன் தலையைக் கொய்த தொன்ம (புராண) வரலாற்றைப் பொருளாகக் கொண்டு, பரணி யென்னுங் களவழி முறையிற் பாடப்பட்ட ஈரடித் தாழிசைப் பனுவல். இது, செந்தமிழுக்கும் ஒட்டக்கூத்தர் பெயருக்கும் பேரிழுக்குத் தருமாறு, செயற்கையான தொடை யும் நடையும் சீர்கெட்ட வடசொற் பெருக்குங் கொண்டு பொருட் சிறப்பற்றிருப்பது, பலராற் பயிலப்படாமைக்குக் கரணியங்காட்டுவதொடு, “பரணிக்கோர் சயங்கொண்டான் என்னுங் கூற்றைப் சாற்றுவதாகவும் உள்ளது.

இதன் வடசொல்லாட்சி வகைகள் வருமாறு:

1. இணைந்தியல் மெய்கள்

பறையறைந்து

எ-டு: சக்ரபாணி, வச்ரமாலை, பத்ரகாளி, மந்த்ரம்,

2. மெய்ம்முதற்சொற்கள்

எ-டு. த்ரிசூலம், ந்ருபதீபன், ப்ரத்தம்

3. தொடர்ச்சொற்கள்

எ-டு; நூபுராதாரசரணி, வர்க்கத்வாதசாதிபர்

கந்த புராணம்

கி.மு. 2000 போல் இந்தியாவிற்குட் புகுந்த ஆரியர், சிந்து வெளியில் தங்கியிருந்தவரை, தம் வேதத் தெய்வங்களையே வணங்கி வேள்வி மதத்தையே மேற்கொண்டு வந்தனர். கிழக்கே பரவிச் சென்று காளிக்கோட்டத்தை அடைந்தபின், அவர் பழங்குடி மக்களான தமிழர்திரவிடரின் தெய்வச் சிறப்பையும், சிவமால் நெறிகளின் உயர்வையுங் கண்டு, அவரைத் தம்வயப் படுத்துதற்கு அவர் மதங்களைத் தமவென்று காட்டத் தலைப் பட்டுவிட்டனர்.