பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தமிழ் இலக்கிய வரலாறு

அம் முயற்சியில், முதற்கண் முத்திருமேனிக் கொள் கையைத் தோற்றுவித்து, பிராமணக்குல முதல்வனாகக் கருதப் படும் பிரமன் என்னும் படைப்புத் திருமேனியைப் படைத்துக் கொண்டு, சிவனென்றும் திருமாலென்றும் இருவேறு பெயரில் தமிழரால் வணங்கப்பட்டுவந்த ஒரே முத்தொழில் முழுமுதற் கடவுளை, காப்புத்திருமேனி திருமாலென்றும் அழிப்புத் திருமேனி சிவனென்றும் இருவேறு ஒரு தொழில் திருமேனிய ராக்கி, அக் கொள்கைகளைப் பழங்குடி மக்கள் ஏற்குமாறு பதினெண் பெரும் புராணங் களையும் பதினெண் துணைப் புராணங்களையும் கட்டிவிட் டனர் ஆரியப் பூசாரியர்.

பெரும்புராணம் பதினெட்டுள், சைவபுராணம், பவிடிய புராணம், மார்க்கண்டேய புராணம், இலிங்கபுராணம், காந்த புராணம், வராக புராணம், வாமன புராணம், மச்சபுராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் என்னும் பத்தும் சிவபுராணங்

களாம்.

அவற்றுள், ஓரிலக்கம் பாவிசை (கிரந்தம்) கொண்ட காந்த புராணம், சனற்குமார சங்கிதை, சூதசங்கிதை, பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூரசங்கிதை என ஆறு சங்கிதைகளை யுடையது.

சி

அச் சங்கிதைகளுள் முப்பதினாயிரம் பாவிசை கொண்ட சங்கர சங்கிதை 12 கண்ட முடையது. அக் கண்டங்களுள் முதலதான சிவ ரகசிய கண்டம், பதின்மூவாயிரம் பாவிசைகள் கொண்டதாய், சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம், உபதேச காண்டம் என்னும் ஏழு காண்டங்களை யுடையது. அவற்றுள் முதலாறையும், காஞ்சிபுரக் குமரகோட்டப் பூசாரியராயிருந்த காளத்தியப்ப சிவாசாரியர் மகனார் கச்சியப்ப சிவாசாரியர் தமிழிற் பாடிய பாவியமே கந்த புராணம்.

66

இப் பாவியம் அரங்கேறும்போது, காப்புச் செய்யுளி லுள்ள திகடசக்கரம்” (திகழ்+தசக்கரம்) என்னும் திரிதற் புணர்ச்சிக்கு நெறிகாட்ட முடியாமையால் அரங்கேற்றம் தடைப்பட்ட தென்றும், பின்னர் வீரசோழியத்திலிருந்து நெறி காட்டியபின் அரங்கேற்றம் நிறைவேறிற்றென்றும் சொல்லப் படுகின்றது.

முதன்முதற் குமரிநாட்டுக் குறிஞ்சிநிலத் தெய்வமாகத் தோன்றிய தமிழ ஒருமுக முருகனை, பனிமலைச்சாரற் சரவணப்