பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தமிழ் இலக்கிய வரலாறு


தில்லையிலிருந்த இரேவணசித்தர் என்னும் வேளாளப் சிவஞான தீபம் என்னும்

புலவர்,

புராணமும் இயற்றினார்.

நூலும் பட்டீச்சுரப்

குகைநமச்சிவாயரின் மாணவரான ஆறுமுக அடிகள் என்பார் நிட்டானுபூதி என்ற நூலை யியற்றினார்.

பதினேழாம் நூற்றாண்டு

தொண்டை நாட்டில் தாழைநகரிற் பிறந்து வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் அருணாசலப் புராணம், திருவருணைக் கலம்பகம், செவ்வந்திப் புராணம், திரு வெண்காட்டுப் புராணம், திருச்செங்காட்டங்குடிப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம் முதலியன பாடினார். அவர் சிவநெறியை நிலை நாட்டினமையால் 'சைவ' என்னும் அடைமொழி கொடுக்கப் பெற்றார்.

.

திருமலை நாயக்கர் காலத்திற் குமரிமுதற் பனிமலை வரை சிவநெறியைப் பரப்பிய துறவியார் குமர குருபர அடிகள். அவர் தருமபுர வளாக நாலாம் பட்டத்தினரான மாசிலாமணி தேசிகரின் மாணவர். திருநெல்வேலி மாவட்டச் சீவைகுண்டத் தில் அருளூண் வேளாள மரபிற் பிறந்து, ஐயாண்டுவரை ஊமையாயிருந்து, திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவி லில் நாப்பூட்டு நீங்கி, அன்றே முருகன் புகழ் பாடத் தொடங்கி னார்

என்பர்.

அவர் பயிற்சி பெற்றுப் பருவ மடைந்தபின், தம் அறிவை யாசிரியர் (ஞானாசிரியர்) கட்டளைப்படி காசி சென்று, இந்துத்தானி மொழியைக் கற்றுத் தேர்ந்து, அக்கால முகலாயப் பேரரசனைக் கண்டு பல இறும்பூதுகள் செய்து, அவன் நட்பும் உதவியும் பெற்று, காசியில் ஒரு சிவமடங் கட்டுவித்து அதன் கிளையாகத் திருப்பனந்தாள் சிவ மடத்தைத் தோற்று வித்து, காசியிலேயே இறைவன் திருவடி யடைந்தார் என்பது வரலாறு.

அவரியற்றிய பனுவல்கள், திருச்செந்தூர்க் கந்தர் கலி வெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மீனாட் சியம்மை குறம், மீனாட்சியம்மையிரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமியம்மையிரட்டை மணி மாலை, பண்டார மும்மணிக்கோவை காசிக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை, கயிலைக் கலம்பகம் என்பன.