பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

105

மூன்றாம் பட்டினத்தார் பாடியவை, அருட்புலம்பல், முதல்வன் முறையீடு, இறந்தகாலத் திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரண மாலை, நெஞ்சொடு மகிழ்தல், பட்டினத்தார் ஞானம் என்பன.

தருமபுரத்தில் 6ஆம் பட்டத்திலிருந்த திருஞான சம்பந்த ரின் மாணவர் வெள்ளியம்பலத் தம்பிரான் திருநெல்வேலிச் சிந்துபூந் துறையிலிருந்த காலை (1630), துறைமங்கலம் சிவப் பிரகாச அடிகட்கு ஐந்திலக்கண நுவலாசிரியராக விளங்கினார்.

சிவப்பிரகாச

அடிகட்கு

இளமையிலேயே உலக வெறுப்பும் துறவு வேட்கையும் விஞ்சிவிட்டதென்பது, அவரை L மணஞ் செய்து கொள்ளச் சொன்ன அண்ணாமலை இரெட்டி யார்க்கு,

"சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப் பாய்கொண்டா னும்பரவும் பட்டீச் சுரத்தானே நோய்கொண்டா லுங்கொளலா நூறுவய தாமளவும் பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே. "நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன்

99

தாளைக்

கிட்டையிலே தொடுத்துமுத்தி பெறுமளவும் பெரியசுகம்

கிடைக்கும் காம

வெட்டையிலே மதியமங்குஞ் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித்

கட்டையிலே தொடுத்துநடுக் கட்டையிலே கிடத்துமட்டுங்

என்று அவர் அளித்த விடை தெரிவிக்கும்.

சிவப்பிரகாச அடிகள் இயற்றிய நூல்கள்

1. சோண சைல மாலை

2. சிவப்பிரகாச விகாசம்

3. சதமணி மாலை

4. நால்வர் நான்மணி மாலை

தாலி

99

கவலை தானே

5. திருச்செந்தில் நிரோட்ட யமக வந்தாதி

6. பழமலை யந்தாதி

7. பிச்சாடன நவமணி மாலை

8. கொச்சகக்கலிப்பா

9. பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம்