பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

107

அவர் இளவலர் திருமணத்தில், அனைவரும் மகிழ்ந் தின்புறுமாறு நகைச்சுவையாகப் பாடிய சில பதினாற்சீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலங்களுள் ஒன்று வருமாறு :

66

'அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்

ஐயஎன் செவியை மிகவும்

அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன்வே லவனை நோக்கி

விரைவுடன் வினவவே அண்ணன்என் சென்னியில் விளங்குகண் எண்ணி னன்என

வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி விகடம்ஏன் செய்தாய் என்ன

மருவும்என் கைந்நீள முழமளந் தானென்ன மயிலவன் நகைத்து நிற்க

மலையரையன் உதவவரும் மையவளை நோக்கிநின்

மைந்தரைப் பாராய் என்ன

கருதரிய கடலாடை யுலகுபல அண்டம்

கருப்பமாப் பெற்ற கன்னி

கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள்

களிப்புடன் உமைக்காக்கவே.

99

சிவப்பிரகாச அடிகள் வீரசிவனியரா யிருந்ததனால், சிவனியர் பலர் பாராட்டவில்லை.

சிவப்பிரகாச

பிரகாச அடிகள்

அடிகளின் சிற்றிளவலான கருணைப் ட்டலிங்க அகவலையும் சீகாளத்திப் புராணத்திற் சீகாளத்திச் சருக்கம் வரையும் பாடித் பாடித் தம் தமையனார்க்கு முன்பே றைவனடி சேர, பேரிளவலான வேலைய

அடிகள் நல்லூர்ப் புராணம், இட்டலிங்கக்

கைத்தலமாலை, வீரசிங்காதன புராணம், நமச்சிவாய லீலை, பாரிசாத லீலை, மயிலத் திரட்டைமணி மாலை, மயிலத்துலா என்னும் பனுவல்களையும் சீகாளத்திப் புராண எச்சத்தையும் பாடி, இறுதியில் இறையடி சேர்ந்தார்.

அழகிய

தருமபுர மடத்தில 8ஆம் பட்டத்திலிருந்த சிற்றம்பல தேசிகர் சுவர்க்கபுர மடத்தைத் தோற்றுவித்தார். அம் மடத்தைச் சேர்ந்த அழகிய திருச்சிற்றம்பலத் திரிபதார்த்த தீபம் என்னும் நூலை இயற்றினார்.

தம்பிரான்

சீகாழி இசைவேளாண் குலத்திற் பிறந்த முத்துத்தாண்ட

வராயர் பதம் 17ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியிற் பாடப்பட்டது.