பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழ் இலக்கிய வரலாறு

இரண்டாம்

இராமநாதபுரம் கடார ஊரினரான சர்க்கரைப் புலவர் (1645-70) திருச்செந்தூர்க்கோவை பாடினார். சர்க்கரைப் புலவர் மிழலைச் சதகம் பாடினார்.

தொண்டை மண்டலத்திற் பூதூரிற் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் (1654), “ஏடா யிரங்கோடி எழுதாது தன்மனத் தெழுதிப் படித்த விரகர்.” அவர் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூருலா, கழுக்குன்ற மாலை, கழுக்குன்றப் புராணம் முதலியன பாடினார்.

இலங்கைப் பரராச சேகர மன்னனின் மருகராகிய அரச சேகரியார், யாழ்ப்பாணத்து நல்லூரிற் பிறந்து வளர்ந்து, ஆழ்வார் திருநகரியில் ஒரு பாவலரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்து, காளிதாசனின் இரகுவம்சத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். பரராச சேகரனுக்குப் பின் ஆண்ட செகராச சேகரன் தமிழ் வளர்த்துத் தக்கிண கைலாச புராணம் பாடினான்.

வடமலையப்பன் காலத்தவரான வென்றிமாலைக் கவிராயர் (1654) திருச்செந்தூர்ப் புராணம் பாடினார்.

எட்டையபுரம் குறுநில மன்னரின் அரண்மனைப் புலவராய் விளங்கிய கடிகைமுத்துப் புலவர் திருவிடைமருதூ ரந்தாதி பாடினார்.

பதினெட்டாம் நூற்றாண்டு

சங்கம் குலத்தில்

தொண்டைநாட்டில் பேறையூரில் தோன்றிய சாந்தலிங்க அடிகள் வைராக்கிய சதகம், வைராக் கிய தீபம், அவிரோத வுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது முதலிய மெய்ப்பொருள் நூல்களை இயற்றினார். அவர் மாணவரான சிதம்பர அடிகள் உபதேச வுண்மை, உபதேசக் கட்டளை, பஞ்சதிகார விளக்கம் என்னும் அறிவை நூல்களை யும், திருப்போர்ச் சந்நிதிமுறை, தோத்திரமாலை முதலிய வழுத்து நூல்களையும், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்தையும் இயற்றினார்.

கோனேரியப்ப முதலியார் உபதேச காண்டமும், மறை ஞானதேசிகர் அருணகிரிப் புராணமும் இயற்றினர்.

சீகாழியில் திகழ்ந்த கண்ணுடைய வள்ளல் ஒழுவிலொ டுக்கம் என்னும் நூலை இயற்றினார்.

சிவஞான வள்ளல் வள்ளலார் சரித்திரமும், சட்டைநாத வள்ளல் வாதுளாகமச் சாரமாகச் சதாசிவரூபமும் இயற்றினர்.