பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

தமிழ் இலக்கிய வரலாறு


99

"அட்டாங்க யோகமும் ஆதார மாறும் அவத்தையைந்தும் விட்டேறிப் போன வெளிதனி லேவியப் பொன்றுகண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூற லுண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே. "எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே.

99

99

99

"நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமதே. "பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம் நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத் தாய்போற் கருதித் தமர்போ லனைவர்க்குந் தாழ்மைசொல்லித் சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெளிந்தவரே.' "நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீமனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் ஏற்றித் தொழூஉம் எழுகோடி மந்திரம் என்னகண்டாய் ஆற்றைக் கடக்கத் துறைதெரி யாமல் அலைகின்றையே. "நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணஞ் சந்தி செபமந்த்ர யோகநிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

99

99

சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே. "உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகி லேன்உயர் பொன்னெனவே ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று வெளியிட் டடைத்துவைத் தேன்இனி மேலொன்றும்

ஞானவெட்டி(யான்)

வேண்டிலனே.

99

இது 17-18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது; ஓகச் செய்திகளைக் கூறுவது. ஆசிரியர் தெரியவில்லை.

தாயுமானவர் பெற்றியர் (சித்தர்) பெறக்கூடிய பெற்றிகளை (சித்திகளை) எடுத்துக்கூறி, மனவடக்கமே மாபெரும் பெற்றி யென்று குறிப்பிடுகின்றார்.