பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

161


5. சமண இலக்கியம்

சாந்தி புராணம்

66

து

து இறந்துபட்டது. இதன் பாட்டொன்று வருமாறு:

‘ஆனை யூற்றின் மீன்சுவையின்

அசுணம் இசையின் வளிநாற்றத் தேனைப் பதங்கம் உருவங்கண் டிடுக்கண் எய்தும் இவ்வனைத்தும் கான மயிலஞ் சாயலார்

காட்டிக் கௌவை விளைத்தாலும் மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே.

பெருங்கதை

99

8ஆம் நூற்றாண்டு


து கொங்குநாட்டு விசயமங்கலத்திற் பிறந்த கொங்கு வேளிர் என்பவரால், வடமொழிப் பாவியத்தினின்று அகவல் யாப்பில் மொழி பெயர்க்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுள்; சிலப்பதிகார மும் மணிமேகலையும் போன்று இயைபு என்னும் வனப்பு வகையைச் சேர்ந்தது; குருகுலத்தவனும் கௌசாம்பி நகரத் தரசனுமான சதானிகனுடைய புதல்வன் உதயணனது வரலாற்றை விரிவாகக் கூறுவது; ஆறு காண்டங்களையும் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகளையுங் உட்பிரிவுகளையுங் கொண்டது. கொங்குவேண் மாக்கதை எனவும் உதயணன் கதை எனவும் படும்.

து

இதன் முதற் காண்டத்தின் முதல் 31 பகுதிகளும், 5ஆம் காண்டத்தில் 9ஆவதிற்கு மேற்பட்ட பகுதிகளும், 6ஆம் காண்டம் முழுமையும், இறந்துபட்டன.

வளையாபதி

9ஆம் நூற்றாண்டு

இது இறந்துபட்ட ஒரு தொடர்நிலைச் செய்யுள். இன்று கிடைப்பன இதன் பாவிசைகளுள் எழுபத்திரண்டே. யாவும் பாவினங்கள்.

அவை

(கிறித்துவிற்குப் பிற்பட்ட) ஐம்பெரும்பாவியங்களுள்

வளையாபதி ஒன்று.