பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

தமிழ் இலக்கிய வரலாறு


நீலகேசி


இது, பழையனூர் நீலிப்பேய் நீலகேசி யென்னும் பெண் வடிவு கொண்டு, சமணத்தை மேற்கொண்டு, குண்டலகேசி, அருக்க சந்திரன், மொக்கலன், புத்தர் ஆகியோரைத் தருக்கத்தில் வென்று புத்த மதத்தையும், பின்னர் அங்ஙனமே ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேத வாதம், பூதவாதம் ஆகிய மதங்களையும், கண்டனஞ்செய்து சமணத்தை நிலைநாட்டிய தாகக் கூறும் படைத்துமொழிப் பாவியம். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது சருக்கம் என்னும் 10 பகுதிகளையும் 894 பாவிசைகளையுங் கொண்டது; ஐஞ்சிறு பாவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுவது. இதற்கு நீலகேசித்திரட்டு (அல்லது தெருட்டு) என்றும் பெயர்.

அருங்கலச்செப்பு

12ஆம் நூற்றாண்டு

இது 180 குறட்பாக் கொண்ட சமணக் கொண்முடிபு நூல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

யசோதர காவியம்

13ஆம் நூற்றாண்டு

இது யசோதரன் என்னும்

அவந்திநாட்டு மன்னன்

வரலாற்றை, சருக்கம் என்னும் 5 பிரிவுகளும் 330 பாவிசைகளுங் கொண்ட பாவியமாகப் பாடியது; சிறுபாவியம் ஐந்தனுள் ஒன்றாகச் சொல்லப்படுவது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 14ஆம் நூற்றாண்டு

மேருமந்தர புராணம்

இது, வாமன முனிவரால் மேரு, மந்தரன் என்னும் இரு அரசப் புதல்வரின் பல பழம் பிறவிகளையும் இறுதி வீடு பேற்றையும்பற்றி, சருக்கம் என்னும் 13 பகுதிகளையும் 1405 பாவிசைகளையும் கொண்ட பாவியமாகப் பாடப்பட்டது.

அவிரோதிநாதர்

இவர் பாடியவை திருநூற்றந்தாதி, திருஎம்பாவை என்னும் இரு அருக வழுத்துப் பனுவல்கள். முன்னது, ஈறு தொடங்கித் தாடையிற் பாடப்பட்ட 100 கட்டளைக் கலித்துறைகளையும், பின்னது 20 பாவைப் பாட்டுகளையும், கொண்டனவாகும்.