பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

தமிழ் இலக்கிய வரலாறு


யன்ன

இருக்குமிடங்களும்” என்று அடியார்க்குநல்லாரும், “அழுந்து பட்டிருந்த பெரும்பா ணிருக்கையும்” என்னும் மதுரைக்காஞ்சி (342) அடிக்கு, “நெடுங்காலம் அடிபட்டிருந்த பெரிய பாண் சாதியின் குடியிருப்பினையும்” என்று நச்சினார்க்கினியரும், உரை வரைந்துள்ளதை நோக்குமிடத்து "களங்கனி கருங்கோட்டுச் சீறியாழும்" (புறம். 127) (புறம். 127) புல்லாங்குழலும் மதங்கமும் (மிருதங்கமும்) இயக்குவார் சிறு பாணரென்றும், செங்கோட்டியாழும் இசைக்குழலும் (நாதஸ்வரமும்) மத்தளமும் இயக்குபவர் பெரும்பாணரென்றும், இருவகைப் ருந்தனரோ என்று கருத நேர்கின்றது.

(5) முல்லைப்பாட்டு

பாணர்

இ து து காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூ தனார், போர்மேற் சென்ற தலைவன் வருமளவும் தலைவி ஆற்றியிருந்ததாகப் பாடிய 103 அடிகொண்ட அகவல். (6) மதுரைக்காஞ்சி

இது, மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு, வீடுபேற்றின் பொருட்டு நிலையாமையை அறிவுறுத்திய செவியறிவுறூஉ; ஆசிரியம் விரவி 782 அடி கொண்ட வஞ்சிப்பா.

(7) நெடுநல்வாடை

து, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ் வருத்தந் தீருமாறு, அவன் பகையை வென்று விரைவில் வருவானாக வென்று கொற்றவையை(காளியை)ப் பரவுவாள் (வழுத்துவாள்) கூறியதாக, நக்கீரனார் பாடிய 188 அடிகொண்ட அகவல்.

(8) குறிஞ்சிப்பாட்டு

இது, தலைவியின் வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்கு அறத்தொடு நிற்கும் பாங்கி கூற்றாக, ஆரிய வரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்தற்குக் கபிலர் பாடிய 261 அடிகொண்ட அகவல்.

(9) பட்டினப்பாலை

து, வேற்றுநாடு செல்லத் தொடங்கிய தலைவன் தன் நெஞ்சை நோக்கித் தலைவியைப் பிரிந்து வாரேனென் செலவழுங்கி(செலவுதவிர்த்து)க் கூறியதாக, கடியலூர் உருத்திரங் கண்ணனார் சோழன் கரிகாற் பெருவளவனை அவன்