பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

195


பட்டுள்ளது. சில மொழிகளிற் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் இந்தியர் பத்தொன்பதின்மரும் ஆங்கிலர் பதின்மருமாக முப்பத்திருவர் மொழிபெயர்த்துள் ளனர்.

(2) களவழி நாற்பது (கி.மு. முதல் நூற்றாண்டு)

இது பொய்கையார் என்னும் புலவர், சேரமான் கணைக் காலிரும் பொறையைச் சோழன் செங்கணானது சிறையினின்று மீட்டற்குப் போர் வெற்றிப் பனுவல் என்றும், செங்கணான் அதற்கு மகிழ்ந்து சேரனைச் சிறைவீடு செய்தான் என்றும் கூறுவர். ஆயின்,

66

பாடிய

'குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆளன் றென்று வாளின் தப்பார்

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாம்இரந் துண்ணும் அளவை

ஈன்ம ரோஇவ் வுலகத் தானே

""

(புறம்.24)

என்னும் புறப்பாட்டின் கீழ், “சேரமான் கணைக்காலிரும் பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறைவாயிற் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்றுள்ள கொளு சிறை வீ வீட்டுச் செய்தியொடு முரண் படுகின்றது.

இம் முரணைத் தீர்க்க, சிறைவீட்டுச் செய்தி சிறைச்சாலை சேரு முன் சேரன் துஞ்சிவிட்டான் என்பர் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை. திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனாரோ, விடுதலை பெற்ற சேரன், சில்லாண்டின் பின் தன் மானவுணர்ச்சிமிக்குத் தன்பழியைத் தீர்த்துக்கொள்ள மீண்டும் சோழனொடு பொருது தோற்றுச் சிறைப்பட்டு, தண்ணீர் கேட்டுத் தாழ்த்துப்பெற்று, “குழவி யிறப்பினும்’ என்னும் பாட்டைப் பாடித் துஞ்சினான் என்று, புதிரை விடுவிக்கப் பார்ப்பர்.

(3) கார்நாற்பது

இது மதுரைக் கண்ணங் கூத்தனார் பாடியது; தலைவனைப்

பிரிந்த தலைவி கார்காலத்தில் அவன் வருமளவும் ஆற்றியிருந்ததைக் கூறுவது.