பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

"பிங்கல முதலா நல்லோர் உரிச்சொல்" என்று

201

(460)

நன்னூலார் கூறுதல் காண்க. நிகண்டு என்னும் வட சொல் வழக்குப் பிற்காலத்ததே. அச் சொல்லிற்குச் சொற் றொகுதி என்பதே பொருள்.

நந்திக் கலம்பகம்

·

பல்லவன் நந்திவர்மனைப்

து தெள்ளா றெறிந்த பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதிற் பல தனிப் பாட்டுகள் கலந்துள்ளன. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நந்திவர்மப் பல்லவன் முடிவைப்பற்றிய கதை நம்பத்தக்க தன்று.

பிங்கல வுரிச்சொல்

10ஆம் நூற்றாண்டு

து திவாகரத்திற் கடுத்ததும் மிகச் சிறந்ததுமான உரிச்சொற் சுவடி. இது கீழ்வருமாறு வகையென்று பெயர்பெறும் பத்துத் தொகுதிகளை யுடையது.

(1) வான்வகை

(2) வானவர்வகை

(3) ஐயர்வகை

(4) அவனி வகை

(5) ஆடவர் வகை

(6) அனுபோகவகை

(7) பண்பிற் செயலின் பகுதிவகை (8)மாப்பெயர் வகை

(9) மரப்பெயர் வகை

(10) ஒருசொற் பல்பொருள் வகை

"செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த பிங்கல முனிவன்எனத் தன்பெயர் நிறீஇ யுரிச்சொற் கிளவி விரிக்குங் காலை

95

என்று சிறப்புப் பாயிரங் கூறுவதால், பிங்கலர் திவாகரருக்கு மகன்முறையினர் என்பது தெரிகின்றது. அது மாணவ மகன் முறையாகவுமிருக்கலாம்

சினேந்திரமாலை

இது உபேந்திராசாரியார் இயற்றிய கணியநூல்.

11ஆம் நூற்றாண்டு

சிலப்பதிகார விரிவுரை

இது தமிழிலக்கண விலக்கியம் முற்றக் கற்ற தலைசிறந்த உரையாசிரியருள் ஒருவரான அடியார்க்குநல்லார் வரைந்தது.