பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

தமிழ் இலக்கிய வரலாறு

அவருரையின்றேல், அரங்கேற்று காதைப் பொருளை இன்று போல் உணர்ந்திருக்க முடியாது. வழக்குரை காதைக்குமேல் அவருரையில்லாவாறு யாக்கை நிலையாமை தடுத்தது

போலும்!

கனாநூல்

இது பொன்னவன் இயற்றியது; கனாவின் பொருளை விளக்குவது.

"வினாமுந் துறாத வுரையில்லை யில்லை

கனாமுந் துறாத வினை

99

(பழ. 12)

என்பது பண்டைநாளில் உலகமுழுதும் பரவியிருந்த நம்பிக்கை; 12ஆம் நூற்றாண்டு

கலிங்கத்துப் பரணி

இது முதற் லோத்துங்கச்சோழன் கருணாகரத் தொண்டைமான் வாயிலாகக் கலிங்கப்போர் வென்றதை, சயங் கொண்டார் பாடிய பாடாண் பனுவல். 'பரணி' என்னும் முக் கூட்டு நாளில் நிகழ்த்திய போரிற் பெற்ற வெற்றியைப் பாடிய பனுவலைப் ‘பரணி’ யென்றது, மும்மடியாகு பெயர்.

இப் பனுவல், கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திர சாலம், இராசபாரம்பரியம், பேய் முறைப்பாடு, அவதாரம் (தோற்றரவு), காளிக்குக் கூளி கூறியது, களங் காட்டியது, கூழ் அடுதல், என்னும் 13 பகுதிகளையுடையது.

கூ

களப்போர் வாகையைப் புகழ்ந்து பாடுவதில் வாகை பெற்ற சயங்கொண்டார், “பரணிக்கோர் சயங்கொண்டான்' ான்" என்று பாராட்டப் பெற்றார்.

இப் பனுவல் ஈரணியும் எண்சுவையும் ஒழுகிசையும் ஓவிய வண்ணனையும் கொண்ட 599 ஆசிரியத் தாழிசைகளால்

இயன்றது.

ஓட்டக்கூத்தர் இயற்றியவை

காங்கேயன் நாலாயிரக் கோவை, மூவருலா, குலோத் துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ், எதிர்நூல், ஈட்டியெழுபது, உத்தர காண்டம் முதலியன.