பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

சரசோதிமாலை

தமிழ் இலக்கிய வரலாறு

து போசராசர் இயற்றிய கணியநூல்.

கணக்கதிகாரம்

இது காரியார் இயற்றிய கணக்குநூல்; நால்வகை அளவை முறைகளும் கீழிலக்க வாய்பாடுகளும் சில அளவறியும் வகை களும் குழிக்கணக்கும் விடுகதைக் கணக்கும் பிறவும் கூறி விளக்குவது.

காதம்பரி

15ஆம் நூற்றாண்டு

இது ஆதிவராக கவிஞரால் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட மண்டில (விருத்த) யாப்புப் பாவியம். கயாதர நிகண்டு

இது கயாதரர் என்பவராற் கலித்துறை யாப்பில் தொகுக்கப்பட்டது.

காளமேகம் (காளமுகில்) பனுவல்கள்

சித்திரமடல், சமுத்திர விலாசம், களவகுப்பு முதலியன.

காளமேகம் தனிப்பாடல்கள்

கடுத்துப்பாடுவதிலும் குறிப்பனைப்படி பாடுவதிலும் இரட்டுறல் பாடுவதிலும் வசை பாடுவதிலும் சாவித்துப் பாடுவதிலும், காளமேகர் தலைசிறந்தவர். வசைபாடக் காளமேகம்” என்று மட்டுங் கூறினாற் போதாது.

எ-டு: கடும்பா

66

கீழ்வரும் பாடல்களெல்லாம் கடும்பாக்களே.

குறிப்பனைப்பா

"மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென் இச்சையிலுன் சென்மம் எடுக்கவா மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்.

99

-

"ஓகாமா வீதோ வுரைப்பன் டுடுடுடுடு

-

நாகார் குடந்தை நகர்க்கிறைவர் வாகாய் எடுப்பர் நடமிடுவர் ஏறுவர் அன்பர்க்குக் கொடுப்பர் அணிவர் குழைக்கு.