பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

தமிழ் இலக்கிய வரலாறு

"மன்னுதிரு அண்ணா மலைச்சம்பந் தாண்டார்க்குப் பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன் மின்னின் இளைத்த மடவார் இவன்குடுமி பற்றி

வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு.

99

து சம்பந்தாண்டானின் செருக்கடக்கியது.

து

66

"சாற்றரிய ஆயிரக்கால் மண்டபத்தின் சார்வாக ஏற்ற முடனே இனிதிருந்து - போற்றும் விறல்விகட சக்கரவி நாயகனை யேத்தும் திறல்விகட சக்கராயு தம்.

99

இது புதைந்துகிடந்த மண்டபத்தைத் தெரிவித்தது. "குன்றும் வனமுங் குறுகி வழிநடந்து சென்று திரிவதென்றுந் தீராதோ - ஒன்றும் கொடாதவரைச் சங்கென்றுங் கோவென்றுஞ் சொன்னால் இடாதோ அதுவே இது.

இதன் பாடவேறுபாடு:

99

'குன்றுங் குழியுங் குறுகி வழிநடப்ப

தென்று விடியுமெமக் கென்கோவே

ஒன்றும்

கொடாதானைக் காவென்றுங் கோவென்றுங் கூறின்

இடாதோ நமக்கிவ் விடி.

99

"மூடர்முன் பாடல் மொழிந்தால் அறிவரோ

ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா

ஆடகப்பொன்

செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்

அந்தகனே நாயகனா னால்.

99

வை தம் வறுமையையும் ஈயாதாரையும் நோக்கிப் புலந்தவை.

'ஆசு கவியால் அகில வுலகெங்கும் வீசு புகழ்க்காள மேகமே - பூசுரா

விண்கொண்ட செந்தழலில் வேவதே ஐயகோ மண்டின்ற பாணமென்ற வாய்.”

இது காளமேகத்தின் உடல் ஈமத்தெரிவது கண்டு புலம்பியது. புறத்திரட்டு

இது கடைக்கழகச் செய்யுள்கள்முதல் கம்பராமாயணம் வரைப்பட்ட பண்டையிலக்கியத்தினின்று, பல்வகைப் பொருள் பற்றித் தொகுத்த 1570 பாடல்திரட்டு. இன்றில்லை.