பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

உவமான சங்கிரகம் (1)

209

இது அடிமுதல் முடிவரை உறுப்புவமங்களை நூற்பா யாப்பில் தொகுத்துக் கூறுவது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வருணகுலாதித்தன் மடல்

இது வருணகுலாதித்தன் என்னும் வள்ளல்மீது காளிமுத்து என்னும் ஓர் அம்மை பாடியது.

கபிலர் அகவல்

து ஒரு கபிலர் பிராமணனுக்கும் புலைச்சிக்கும் பிறந்ததனாற் பிறந்தவுடன் பெற்றோராற் கைவிடப்பட்டுக் கிடந்து, ஒரு பிராமணனால் எடுத்து வளர்க்கப்பட்டு, பருவம் வந்தபின் பூணூற்சடங்கு பிற பிராமணரால் தடுக்கப்பட்ட போது, அவர் பிறவிக்குல வேற்றுமையைக் கண்டித்துப் பாடிய 136 அடிகள்கொண்ட அகவற்பாட்டு.

தேரையர்

க்

இவர் பல மருத்துவ நூல்கள் இயற்றினார். முதுபண்டை காலத்தில் தமிழர் அறுவை மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந் தனர் என்பது, தேரையர் வரலாற்றினின்று தெரிகின்றது.

அரிச்சந்திர புராணம்

16ஆம் நூற்றாண்டு

இது நல்லூர் வீரன் ஆசுகவிராயர் இயற்றியது.

ஆதிவீராம பாண்டியன்

இவன் இயற்றியவை வெற்றிவேற்கை என்னும் நறுந் தொகையும் நளன் கதை பற்றிய நைடதமும்.

கொக்கோகம்

வடமொழியின்று

இது வரதுங்கராம பாண்டியன் மொழிபெயர்த்த காமநூல். இது வரகுணராம பாண்டியன் மொழிபெயர்ப் பென்று சென்னைத் தமிழகரமுதலி கூறும். சூடாமணி நிகண்டு

இது மண்டல புருடன் மண்டில யாப்பில் தொகுத்தது. திவாகரம் போன்றே 12 தொகுதிகளை யுடையது.

அகராதி நிகண்டு

இது இரேவண சித்தர் நூற்பா யாப்பில் தொகுத்தது.