பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் உலகநீதி

211

து, வேண்டாம் வேண்டாம் என்று எதிர்மறை நல்வினை களான உலகப்பொது நேர்பாடுகளை (நீதிகளை)க் கைக்கொள்ள ஏவும், 13 எண்சீர் ஆசிரிய மண்டிலங் கொண்ட எளியநடைச் சிற்றற நூல். இதன் ஆசிரியர் உலகநாக பண்டிதர்.

தையூர் உத்தண்டன் கோவை

400 துறை கொண்டது. இதன் ஆசிரியர் தெரியவில்லை. தெய்வச்சிலையார் விறலிவிடுதூது

இதைப் பாடியவர் குமாரசாமி அவதானி.

இரத்தினச்சுருக்கம்

இது முடிமுதல் அடிவரை உறுப்புவமங்களைக் கட்டளைக் கலித் துறை, வெண்பா, மண்டிலம் ஆகிய மூவகை யாப்பில் தொகுத்துக் கூறுவது; புகழேந்திப் புலவர் பெயரில் வழங்கு கின்றது. 17ஆம் நூற்றாண்டு

ஆசிரிய நிகண்டு

இது

தொகுத்தது.

ஆண்டிப்புலவர்

கைலாச நிகண்டு

ஆசிரிய

மண்டில யாப்பில்

து கைலாசர் என்பவர் நூற்பா யாப்பில் தொகுத்தது.

பாரதிதீப நிகண்டு

து திருவேங்கட பாரதி கலித்துறை யாப்பில் தொகுத்தது.

பல்பொருட் சூடாமணி நிகண்டு

இது ஈசுவரபாரதி மண்டில யாப்பில் தொகுத்தது. நீதிநெறி விளக்கம்

இது, குமரகுருபரர் பாடிய அறநூல்; 102 அளவியல் வெண்பாக் கொண்டது.

நன்னெறி

இது சிவப்பிரகாச அடிகள் பாடிய அறநூல்; 40 நேரிசை வெண்பாக் கொண்டது.