பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

பந்தனந்தாதி

தமிழ் இலக்கிய வரலாறு

இது பந்தன் என்னும் வணிகன்மீது பாடப்பட்ட ஈறு தொடங்கிப் பனுவல். இது ஓர் ஒளவையார் பாடினதாகச் சொல்லப்படுகின்றது.

உவமான சங்கிரகம் (2)

இது முடிமுதல் அடிவரை உறுப்புவமங்களை வெண்பா யாப்பில் தொகுத்துக் கூறியது. இதன் ஆசிரியர் பெயர் தெரிய வில்லை.

18ஆம் நூற்றாண்டு

அரும்பொருள் விளக்க நிகண்டு

இது அருமருந்தைய தேசிகர் மண்டில யாப்பில் தொகுத்தது. உசித சூடாமணி நிகண்டு

இது சிதம்பரக் கவிராயர் மண்டில யாப்பில் தொகுத்தது, பொதிகை நிகண்டு

இது சாமிநாத கவிஞர் மண்டில யாப்பில் தொகுத்தது. பொருட்டொகை நிகண்டு

பட்டது.

து சுப்பிரமணிய பாரதியால் நூற்பா யாப்பில் தொகுக்கப்

ளவை நிகண்டு

இது மண்டில யாப்பில்

ஆசிரியர் தெரியவில்லை.

உவமான சங்கிரகம் (3)

தாகுக்கப்பட்டது.

இதன்

து அடிமுதல் முடிவரை உறுப்புவமங்களை மண்டில யாப்பில் தொகுத்துக் கூறியது. இதன் ஆசிரியர் தெரியவில்லை. 3. மூவேந்தர் குடியுஞ் செய்த இனமொழிக் கேடுகள்

இக்கால வரலாற்றறிவும், அறிவியலாராய்ச்சியும், உரிமை யுணர்ச்சியும், விடுதலைக் கிளர்ச்சியும், இம்மியுமில்லாத பண்டைக் காலத்தில் பழங்குடிப் பேதைமையும் மதவெறியும் காLை மடமும் இயல்பாகக்கொண்ட மூவேந்தரும், வெண்ணிறத்தொடும் வெடிப்பொலி மிக்க வேதமொழி யொடும் வடக்கிருந்து வந்து, தம்மை நிலத்தேவர் என்றும், தம் சிறுதெய்வ வழுத்துமொழியைத் தேவமொழியென்றும், தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்கள் என்றும், ஏமாற்றிய ஆரியப்