பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

213

பூசாரியரை முற்றிலும் நம்பி அவருக்கு அடிமைப்பட்டுப் போனதினால், “மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி” என்னும் பழமொழிக்கிணங்க, அவர் குடிகளான தமிழரும் அவரைப் பின்பற்றி, கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரிய அடிமைத் தனத்தில் முற்றும் முழுகிவிட்டனர்.

(1) பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

ஆரிய மதம் சிறுதெய்வ வேள்வி வளர்ப்பு; தமிழ மதம் கடவுள் அல்லது பெருந்தேவ வழிபாடு. ஆரியப் பூசாரியர் இவ் விரண்டையும் இணைத்துவிட்டதனால், தமிழவேந்தர் அவற்றின் வேறுபாடறியாது, ஏராளமான பொருளைச் செலவிட்டு

ஒருவரோடொருவர் போட்டியிட்டு,

ஆயிரக்கணக்கான

வேள்விகளை இயற்றத் தலைப்பட்டுவிட்டனர்.

தனால் விளைந்த கேடுகளாவன:

(1) ஆரியப் பூசாரியரின் உயர்வும் தமிழர் தாழ்வும்.

(2) வடமொழியின் உயர்வும் வளர்ச்சியும் தமிழின் தாழ்வும் தளர்ச்சியும்.

(3) தமிழப் போற்றியாரின் பிழைப்பின்மையும் ஆரியப் பூசாரியரின் செழித்த வாழ்வும்.

(4) பெருந்தொகையான பொதுப்பணத்தின் வீண்செலவு.

(5) மீட்க முடியாத தமிழிலக்கிய இழப்பு.

"இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை யெதிரே.

"நற்பனுவல் நால்வேதத்

தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை

நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பலகொல்.'

(புறம். 6)

(புறம். 15)

நெட்டிமையார்

இவை முதுகுடுமிப் பெருவழுதியை பாடியன. வேள்வி யென்னுந் தென்சொல்லினும் யாகம் என்னும் வடசொல் அவனுக்கு விருப்பமாயிருந்திருக்கின்றது. இளங்கோ வடிகள் போலும் முற்றத் துறந்த மூதறிஞர்க்குரிய முனிவர் என்னும் பெயர், வேதங்கற்ற பிராமணர்க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. (2) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

பாண்டிநாட்டுத் தங்காலூரில் தட்சிணாமூர்த்தியின் தந்தை வார்த்திகன் என்னும் பிராமணன், விலைமிகுந்த பொன்மணி யணி