பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

215

முதலாம் அரசவரசன் தேவார ஏடுகள் அங்கிருப் பதையறிந்து, அங்குச் சென்று அவ் வறையைத் திறக்கச் சொன்னான். அங்குள்ள பூசாரியர், தேவார மூவரும் பூட்டிவைத்துவிட்டுச் சென்று விட்டனரென்றும், அவர் வந்தால்தான் திறக்கமுடியும் என்றும், சொல்லித் திறக்க மறுத்து விட்டனர். அதன் பின், அரசவரசன் ஒரு சூழ்ச்சியாகத் தேவார மூவர் உருவப் படிமைகளைக் கொணர்ந்து நிறுத்தித் திறக்கச் சொன்னான். அப்போது, மறுக்க வழியின்றிப் பூசாரியர் திறந்தனர். சிதலரித்த பகுதிகண்டு அரசன் சினவாதவாறு, 'இக்காலத்திற் கேற்காத ஏடுகளையெல்லாம் யாமே சிதலரிக்கவிட்டேம்” என்று இறைவனே சொல்வது போன்று, ஓர் உடம்பிலிக் கூற்றுப் போலி மேலெழுந்தது. “வேகிற வீட்டில் பிடுங்கினது ஊதியம்” என்று அரசனும் ஓரளவு அகமகிழ்ந்து திரும்பிச் சென்றான்.

அரசன் நல்லாண்மையனாய் இருந்திருந்தால், முதன் முறையிலேயே தேவார அறையைத் திறக்கச்சொல்லி யிருக்கலாம். பூசாரியர் துணிச்சலுடன் மறுத்தது, அவரது ஆணவத்தையும், அரசனின் அடிமைத்தனத்தையுமே காட்டுகின்றன.

அகர மேற்றுதல்

அகரம் மருதநிலத்தூர். அகரமேற்றுதலாவது, ஆயிரக் கணக்கான பிராமணரை வடநாட்டினின்று வருவித்துத் தமிழகத்து மருதநில வளநகரிற் குடியேற்றி, அதை அவர்க்குத் தானமாக அளித்தல்.

மணலூரிலிருந்த குலசேகர குலசேகர பாண்டியன், அகரமேற்ற நினைந்து, சாகேதபுரி என்ற இடத்திலிருந்து பிராமணர் ஈராயிரத்தெண்மரை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேம்பற்றூருக்கு வரவழைத்து, ஒவ்வொருவருக்கும் நிலமும் மனையும் வழங்கினதினால், அவ்வூர் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் எனப் பெயர்பெற்றது. இதை,

"தனக்கொருபத் தேழு கலிக்கொருபத் தாறு புனக்குடுமிக் கோமான் புதல்வன்

-

மனக்கினிய

தென்னிம்பை யூரதனைத் சீர்மறையோ ருக்களித்தான்

கன்னன் குலசே கரன்

99

என்னும் பழைய வெண்பாத் தெரிவிக்கும்.

இனி, னி, அப் பாண்டியன் ஈராயிரத்தெண் பிராமணக் குடும்பங்களை வருவித்து, ஒவ்வொன்றிற்கும் ஓர்

ஊரை

நல்கினான் என்றும், ஒரு செவிமரபுச் செய்தி வழங்கி வருகின்றது. வேம்பத்தூர் என்பது வட மொழியில் நிம்பை என வழங்கும்.