பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

தமிழ் இலக்கிய வரலாறு

கடைக்கழகக் காலத்தவனான முதுகுடுமிப் பெருவழுதி, வேள்விக்குடி யென்னும் ஊரைக் கொற்கைகிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்குத் தானஞ் செய்தான்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டினனான பிராமணரை அகரமேற்றியதை,

வரகுணபாண்டியன்

“பொன்றிகழ் தருவிமானப் புரிசைசெய் தகர மேற்றி நன்றிகொள் தேவதானம் நல்கியாங் கிருக்கு நாளில்

99

(48:22)

என்னும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண அடிகள் தெரிவிக்கும்.

முதலாம் இராசராசன் காலத்தில், இராசராசச் சதுர்வேதி மங்கலம் என்னும் அகரம் ஏற்பட்டது.

66

இங்ஙனம் மூவேந்தரும் அடிக்கடி அகரமேற்றியதை,

'அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரிலை யென்றது நிச்சயந் தானே.

99

'ஆறிடும் வேள்வி அவிகொளும் நூலவர் கூறிடும் விப்பிரர் கோடிபேர் உண்பதில் நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

(திருமந். 1824)

99

(திருமந். 1825)

என்று திருமூலர் கண்டித்தார்.

தானம்

வேந்தரும் வேளிரும் பெருஞ்செல்வரும் பிராமணர்க்குக் கொடுக்கவேண்டிய தானங்கள், கீழ்வருமாறு பதினாறென மச்ச புராணங் கூறும்.

(1) துலைநிறை (துலாபாரம்)

(9)

பொன்யானைத்தேர் (இரணிய ஹஸ்திரதம்)

(2) பொன்பிறப்பு (இரணிய கர்ப்பம்) (10) ஐயேர் நிலம் (பஞ்சலாங்கலபூ)

(3) பெருங்கோளம் (பிரமாண்டம்)

(4) விண்மரம் (கல்பபாதவம்)

(5) ஆவாயிரம் (கோஸ கஸ்ரம்)

(6) பொன்னா (இரணிய காமதேனு) (7) பொற்பரி (இரணியா சுவம்) (8) பொற்பரித் தேர்

(இரணியாசுவ ரதம்)

(11)

நாவலந்தீவு (தராதலம்)

(12) உலகச்சக்கரம் (விஸ்வ சக்கரம்) (13) விண்பெருங்கொடி(மகா கல்பலதா) (14) மணியா (இரத்ந தேனு)

(15) எழுகடல் (ஸப்த ஸாகரம்)

(16) ஐம்பூதக்குடம் (மகாபூதகடம்)