பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 களிலிருந்த தமிழ் இலக்கிய வரலாறு அவருடைய மாணவருக்கும் மாணவரின் மாணவருக்கும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆடவல்லான் மரக்காலால் ஈராயிரங்கல நெல் ஆண்டுதோறும் அளித்து வந்தமையும், அவன் எந்த அளவிற்குத் தன்னை ஆரிய அடிமை யாக்கிக் கொண்டான் என்பதைத் தெரிவிக்கும். கல்வி ஆங்கிலராட்சி ஏற்படும்வரை, பண்டைக்காலத்தில் தமிழ கத்திலும் ஏனை யிந்திய நாடுகளிலும் கல்வித்துறை அரசியல் திணைக் களங்களுள் (departments) ஒன்றாக இருந்ததில்லை. பழங்குடி மக்களான தமிழரும் திரவிடரும், தனிப்பட்ட கணக்காயர் பள்ளிகளிலும் ஆசிரியர் இல்லங்களிலுமே பொருள் கொடுத்தும் பணிவிடை செய்தும் விரும்பிய அல்லது இயன்ற அளவு கல்வி கற்று வந்தனர். உயர்கல்வி கற்றுப் பாவலராகிப் புகழ்ச்சிப் பனுவல் பாடியவர்க்கும் சிறந்த நூலியற்றியவர்க்கும், அரசர் பரிசளிப்பது வழக்கமாயிருந்தது. ஆயின், பிராமணர்க்கோ, எல்லாப் பெருங்கோயில் களிலும், மடங்களிலும், அரசியற் செலவிலும் அரசியல் அதிகாரிகளான பெரு மக்கள் நன்கொடையாலும், தென்மொழி யிலும் வடமொழியிலும் உயர்மட்டம்வரை ஊணுடை யுறையுளொடு கூடிய இலவசக்கல்வி அளிக்கப்பட்டு வந்தது. (1) காமப்புல்லூர் வடார்க்காட்டைச் சேர்ந்த காமப்புல்லூர்ச் சபை (ஆளுங்கண) உறுப்பினர் ஒருவர் ஒரு வேதப்பாடசாலை நடத்தி வந்ததாக, முதலாம் பராந்தகன், சுந்தரச்சோழன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் தெவிக்கின்றன. (2) ஆனையூர் கி.பி. 999-ல், செங்கற்பட்டைச் சேர்ந்த ஆனையூர்ப் பெருஞ்சபை, வேதம், பாணினீயம், அலங்காரம், மீமாம்சை ஆகிய வற்றைக் கற்பிக்க வல்ல ஒரு பிராமணர்க்குப் பட்டவிருத்தி ஏற்படுத்திற்று. மாணவர்க்கு இலவச வூண் அளிக்கப்பட்டது. (3) எண்ணாயிரம் முதலாம் இராசேந்திரன் காலத்தில், இராசராசச் சதுர்வேதி மங்கலம் என்னும் எண்ணாயிரத்தில், ஒரு வேதக்