பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

219

கல்லூரி தோற்று விக்கப்பட்டது அல்லது நிலையுயர்த்தப் பட்டது.

அதில் 270 கீழ்க்கல்வி மாணவரும் 70 மேற்கல்வி மாணவரும் கற்றனர். ஆசிரியர் பதினால்வர். ரூபாவதாரம், நால்வேதம், போதாயன கற்பம், வியாகரணம், மீமாம்சை, வேதாந்தம் முதலியன கற்பிக்கப்பட்ன. மாணவர் படியும் ஆசிரியர் சம்பளமும் நெல்லாகக் கொடுக்கப்பட்

ன.

மாணவர் அன்றாடப் படி, கீழ்க்கல்வியர்க்குத் தலைக்கு

6 நாழி; மேற்கல்வியர்க்குத் தலைக்கு 10 நாழி.

ஆசிரியர் அன்றாடச் சம்பளம், வேதாந்தப் பேரா சிரியர்க்கு 11/3 கலம்; மீமாம்சை வியாகரண ஆசிரியர்க்குத் தலைக்கு 1 கலம்; பிறருக்குத் தலைக்குக் காற்கலம் அல்லது முக்குறுணி.

மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் அன்றாட நெல்லளப்பொடு ஆட்டைப்பொன்னும் அளிக்கப்பட்டது. வியாகரண மீமாம்சை ஆசிரியர்க்கும் மேற்கல்வி மாணவர்க்கும், பாடம் நடத்தப்பட்ட அதிகாரம் ஒன்றிற்கு 1 கழஞ்சு மேனியும், பிறருக்கு அரைக் கழஞ்சு மேனியும் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டது. வேதாந்த ஆசிரியர்க்கு மட்டும் பொன்னளிப்பில்லை.

(4) திரிபுவனி

புதுச்சேரி யருகில் திரிபுவனி யென்னும் நகரிலும், எண்ணாயிரம் வேதக்கல்லூரி போன்றதொன்று இருந்ததாக, இராசாதிராசனின் 13ஆம் ஆண்டுக் (1048) கல்வெட்டொன்று குறிக்கின்றது.

அதில் 260 மாணவரும் 12 ஆசிரியரும் இருந்தனர். பாடத் திட்டம் எண்ணாயிரத்திற் போன்றதே. ஆயின், பிரபாகரம் மட்டும் குறிக்கப்படவில்லை. அதற்குப் பன்மடங்கு ஈடுசெய்ய, சத்தியாசாட (ஸத்யா ஷாட) சூத்திரம், மனுதரும சாத்திரம், வைகானச சாத்திரம், பாரதம், இராமாயணம் என்பன கற்பிக்கப் பட்ட

ன.

மாணவர் அன்றாடப் படி, கீழ்க்கல்வியர்க்கு 6 நாழி; மேற் கல்வியர்க்கு 8 நாழி.

ஆசிரியர் அன்றாடச் சம்பளம், வேதாந்தப் பேராசிரியர்க்கு 1/6 கலம்; பிறருக்குத் தலைக்குக் காற்கலம் முதல் ஒரு கலம்வரை.