பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

தமிழ் இலக்கிய வரலாறு

(பிரமஹத்தி) அவரைப் பிடித்தது. அவ் விருவரும் என்னென்ன கழுவாய் (பிராயச்சித்தம்) செய்தும் எங்கெங்குச் சென்றும், றைவனாலும் தப்பமுடியவில்லை. இறுதியில் திருவிடை மருதூர் சென்று தப்பினர் என்பது கதை. கொலைப்பழி என்பது எல்லாக் காலைக்கும் பொது; பிராமணக் கொலைக்கு மட்டும் உரியதன்று. மேலும், தற்செயற்கொலைக்குக் கழுவாய் போதும்; தண்டனைக் கொலை அரசனின் கடமை; அது அறத்தின் பாற் பட்டது. ஆதலால் மேற்கூறிய பிராமணப் பழிக்கதைகள், பிராமணனைக் கொல்லக்கூடாது என்பதற்கும், திருவிடை மருதூர்க் கோயில் வழிபாடு வலிமையிற் சிறந்தது என்பதற்கும், கட்டப் பட்டவையே. தமிழவேந்தரின் முன்னோக்கின்மை

ஆங்கிலர் பத்தாயிரங் கல் தொலைவினின்று வந்து, ஆத்திரேலியா என்னும் தென்கண்டம் முழுவதையுங் கைப்பற்றிக் கொண்டனர். தமிழவேந்தர் கங்கைகொண்டும் கடாரம் வென்றும், ஐம்பது கல் தொலைவில் அண்மையிலுள்ள இலங்கையைப் பற்றாது, தமிழர் தத்தளித்துத் திண்டாட விட்டுவிட்டனர். இது அவரது ஆரிய மயக்கின் விளைவே. வீண்பகட்டான அவரது மெய்க்கீர்த்தியால் என்ன பயன்?

தமிழரின் தாழ்வு

அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் வேளாளர் என்னும் அகப் பொருளிலக்கணம் பற்றிய நால்வகுப்புள், அந்தணர் வகுப்பை ஆரியர் கவர்ந்துகொண்டனர்; வேளாளர் சூத்திரராயினர். மூவேந்தர் அரசு அற்றுப்போனபின், இடையிரு வகுப்பாரும் சூத்திர வகுப்புள் தள்ளப்பட்டனர். வேளாளர்க்குக் கீழ்ப்பட்ட மக்களுள் ஒருசாரார் தீண்டாதார் என்னும் பஞ்சமராயினர். அவருள்ளும் ஒரு சிறு தனி வகுப்பார் காணாதாராயினர். அவர் நாயாடிகள்.

தமிழின் தாழ்வு

தமிழ் வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாத மொழியென்று தள்ளப்பட்டபோதே, தமிழின் தாழ்வு தொடங்கிவிட்டது. ஆரியச் சிறுதெய்வ வழுத்துத் திரட்டுகள் தெய்வமறைகளாகப் போற்றவும், தமிழர் முழுமுதற் கடவுள் மெய்ம்மறைகள் இழிந்தோர் நூல்களாகத் தூற்றிப் புறக்கணிக்கவும் பட்டன. ஆரியச் சிறுதெய்வ வழுத்துகளை ஓதுபவரே மறையோர் எனப்

பட்டனர்.