பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

223

தமிழைத் தமிழரே புறக்கணிக்கவும் பழிக்கவும் தலைப்பட்ட தனால், அது பல்வேறு வகையிற் சிதைந்தும் புதைந்தும் இற்றை நிலை யடைந்தது. அது சிதைந்த வகைகள் பின்னர் விளக்கப்படும். 4. சமற்கிருத இலக்கிய வளர்ச்சியும் தமிழிலக்கியத் தளர்ச்சியும்

வேத ஆரியரின் முன்னோர் கி.மு. 2000 போல் இந்தியாவிற் குட் புகுந்தபோது, வாய்மொழியான சில சிறுதெய்வ வழுத்துகள் தவிர ஒருவகை யிலக்கியமும் அவருக்கிருந்த தில்லை. தமிழர்க்கோ பாட்டு, உரை, நூல், மந்திரம் (வாய் மொழி), விடுகதை(பிசி), எதிர்நூல் (அங்கதம்), பழமொழி ஆகிய எழுவகைப்பட்ட செய்யுள் இலக்கியம் ஏராளமாக இருந்தது. நூல் என்பன இலக்கணமும் பல்வேறு அறிவியலும். மந்திரம் என்பது திருமந்திரம் போன்ற மறைநூல்.

வேத ஆரியர் சிறுசிறு கூட்டமாக வந்தனர். அவருட் பூசாரியரே பிரிந்து நின்றனர். ஏனையோரெல்லாம் பழங்குடி மக்களோடு இரண்டறக் கலந்துபோயினர். அதனால் அவர் மொழியும் வழக்கற்றுப்போயிற்று. அவர் மொழியொடு பிராகிருதம் என்னும் வடநாட்டுப் பழங்குடி மக்கள் மொழி கலந்ததே வேதமொழி. பிரா = முன்பு. முன்பு. கிருதம் = செய்யப்பட்டது.

ஆரியப் பூசாரியர் சிந்துவெளியில் இருந்தபோதே, இந்திரன் என்று வழங்கிய தமிழவேந்தன் வணக்கத்தை மேற்கொண்டனர். வேந்தன் என்பவன், தமிழரின் திணைநிலைக் காலப் பழைய மருதநில மழைத்தெய்வம்.

"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

99

(தொல். அகத். 5)

வடநாட்டில் வேந்தன் என்னும் பெயர் இந்திரன் என மாறிற்று. இரு சொற்கும் அரசன் என்பதே பொருள். நரேந்திரன், மிருகேந்திரன் முதலிய சொற்களை நோக்குக. காவிரிப்பூம் பட்டினத்தில் கொண்டாடப்பட்ட இந்திரவிழா தமிழர் விழாவே. தெய்வப்பெயர் வடசொல்லாயினும் தெய்வமும் விழாவும் தமிழரன என்பதை அறிதல் வேண்டும். சிவனியமும் மாலியமும் ஆகிய ஐந்திணைப் பொதுவான பெருந்தேவ மதங்கள் வளர்ச்சி யடைந்தபின், மருதத்திணைக்கு மட்டுமுரிய வேந்தன் வழிபாடு வழக்கற்றது.

மாக்கசு முல்லர், What can India teach us? என்னும் தம் கட்டுரைப் பொத்தகத்தில்,