பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

தமிழ் இலக்கிய வரலாறு

"In some of the hymns addressed to Indra his original connection with the sky and the thunderstorm seems quite forgotten. He has become a spiritual god, the only king of all worlds and all people, who sees and hears everything, nay, who inspires men with their best thoughts. No one is equal to him, no one excels him.

"The name of Indra is peculiar to India, and must have been formed after the separation of the great Aryan family had taken place, for we find it neither in Greek, nor in Latin, nor in German." (p.182)

வடநாட்டுப் பழங்குடி மக்கள் ஏற்கெனவே ஆரியப் பூசாரியரின் வெண்ணிறத்தாலும் வெடிப்பொலி மந்திர மொழியாலும் கவரப்பட்டிருந்தனர். தம் தெய்வமாகிய இந்திரனை அவர் அவர் வணங்கி வணங்கி அவனைத் தந் தெய்வமென்று சொன்னபின், அவருக்கு முற்றும் அடிமையராய்ப் போயினர். இந்திர வழிபாடு பெருவழக்கா யிருந்ததனால், ஆரியப்

பூசாரியர்க்குப் பெரும்பான்மைத் துணை கிட்டிற்று; அத்துணை கொண்டே, தமக்கு மாறானவரையெல்லாம் பொருது வென்றனர். இங்ஙனம் பழங்குடி மக்களைக்கொண்டே பழங்குடி மக்களை வென்றதை மேலையறிஞர் அறியாது, ஆரியர் பெரும்பான்மை யால் அல்லது போர்த்திறத்தால் ‘தஸ்யுக்கள்' என்று அவர் பழித்த பழங்குடி மக்களை வென்றதாகக் கூறுவர். அறிவாராய்ச்சி மிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும், தமிழகத்தில் தமிழர் முன்னேற்றத்திற்கென்றே ஏற்பட்ட நயன்மைக் கட்சியை (Justice Party), தமிழரைக்கொண்டே சிறுபான்மைப் பிராமணர் தோற்கடித்ததையும், மறைமலையடிகளும் பெரியாரும் புல மக்களிடையும் டையும் பொதுமக்களிடையும் எத்துணையோ எடுத்து விளக்கினும், இன்னும் பேராயக்கட்சித் தமிழர் சமற்கிருத வழிபாட்டையும் இந்தி யாட்சியையும் ஏற்பதையும், நோக்கும் போது மூவாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வேதக்கால வடநாட்டுப் பழங்குடி மக்களின் நிலைமையையுணர்தற்கு, எட்டுணையும் முட்டுப்பாடில்லையென்பதை அறிக.

ஆரியப் பூசாரியர் சிந்துவெளியினின்று கிழக்கு நோக்கிச் சென்று காளிக்கோட்டத்தை யடைந்தபின், தமிழரின் காளி வணக்கத்தையும் மேற்கொண்டனர். காளியென்பது, குமரி நாட்டில் தோன்றிய பாலை நிலத் தெய்வம். கூளி(பேய்) களின் தலைவி காளி. கரியவள் என்பது சொற்பொருள். கள்-காள்-காளம்-காளி. மாயோள் என்னும் இலக்கிய வழக்குப் பெயரும் இப் பொருளதே. காளி, கருப்பி, கருப்பாய், கருப்பம்மை என்பன, நாட்டுப்புறப் பெண்டிர்க்கு இடும் பெயர்கள். காளி தெய்வமானமைபற்றி அம்மை(தாய்) எனப்பட்டாள்.