பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

றோதிய புலவனு முளனொரு வகையால் இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன் என்னும் பழைய மேற்கோள் நூற்பாவையும்,

'புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்

""

99

227

என்னும் சிலப்பதிகார அடிகளையும் (11:98-9) நோக்குங்கால். ஐந்திர வியாகரணம் ஓரளவு தமிழ்த் தொடர்பைக் காட்டின தினால், பாணினீயம் தோன்றியபின், முன்னதன் படிகளெல் லாம் தொகுக்கப்பட்டு அழகர்மலைக்கண் ஒரு பொய்கையில் அல்லது சுனையில் எறியப்பட்டனவோ என்று ஐயுறவுண்டா கின்றது.

வடமொழி வியாகரணங்களுள் தலைமையான பாணினீயம் எத்துணைச் சிறப்பும் விரிவும் அடைந்திருப்பினும், நன்னூல் போன்று எழுத்துஞ்சொல்லுமே கூறுதலால், யாப்பும் அணியும் உள்ளடங்கிய பொருளதிகாரத்தைக் கொண்ட தொல்காப்பியம் போலும் பிண்ட நூலுக்கு எவ்வகையிலும் ஈடாகாது.

ஆயினும், அதற்குத் தொல்காப்பியத்தினும் மேலாகச் சிறப்புக் கொடுத்ததற்கு, வடமொழி தேவமொழியென்று நம்பப் பட்டமையும், பாணினீயத்தின் முதற் பதினான்கு நூற்பாக்களும் சிவபெருமான் உடுக்கையினின்று தோன்றிய சிவசூத்திரங்கள் என்று ஏமாற்றியமையும், அக்காலத்து மொழியாராய்ச்சி யின்மையும், தமிழரின் பழங்குடிப் பேதையுமே கரணியம்.

பாணினீயம் தோன்றியது கி.மு. 5ஆம் நூற்றாண்டு. ஐந்திர வியாகரணம் கி. மு. 8ஆம் நூற்றாண்டினதா யிருக்கலாம்.

அகத்தியர் காலத்திலேயே, வடமொழி முதற் பாவியமான (ஆதிகாவியமான) வான்மீகி யிராமாயணம் சற்றுச் சிற்றளவில் தோன்றியதாகத் தெரிகின்றது. அதற்கு இரண்டொரு நூற்றாண் டிற்குப் பின் பாரதக்காலத்தில், மகாபாரதம் தோன்றிற்று. இவ் விரண்டும் வடமொழிப் பாவியங்களுள் இதிகாசம் (மறவனப்பு) என்னும் தனிப்பிரிவைச் சாரும்.

இராமாயணத்தொடு சமற்கிருதக் காலம் தொடங்கு கின்றது. அதற்கு முந்தியதெல்லாம் வேதக்காலம். வேதமொழி தமிழொடு கலந்து வளர்ச்சியடைந்த பின்னரே, சமற்கிருதந் தோன்றிற்று. இதையறியாது, மேலையரும் வேதமொழியை வேத சமற்கிருதம் என்பர். அது முற்காலப்படுத்தம் (prochronism) என்னும் வழுவாகும்.