பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

தமிழ் இலக்கிய வரலாறு

அதர்வவேதம் மட்டும் இராமாயணத்திற்குப் பின்பும் பாரதத்திற்கு முன்பும் தோன்றியதாகத் தெரிகின்றது. நால்வேதத் திற்கும் பின்னர்த் தோன்றியதனால், பாரதம் உத்தரவேதம் அல்லது ஐந்தாம் வேதம் எனப்பட்டது.

இராமாயணமும் பாரதமும் முதன்முதல் வடமொழியில் தோன்றினும், இடத்தாலும் பாட்டுடைத் தலைவராலும் தென்ன வர்க்கும் வடவர்க்கும் அல்லது தமிழருக்கும் ஆரியர்க்கும் கதையளவிற் பொதுவானவையே.

வரலாற்றுக் காலத்திற்குமுன் வடநாடு சென்று வாழ்ந்த மதிக்குல மென்னும் பாண்டியர் குடிக்கிளைக் கொடிவழியே, பாண்டவ கௌரவர் பிறந்த பரதகுலம். அங்ஙனமே சென்று வதிந்த கதிரவக் குலமென்னும் சோழர்குடிக் கிளைவழியே இராமன் பிறந்த அரசக் குடி. இனி, இராம கதையும் பாண்டவர் வாழ்க்கை வரலாறும், தென்னாட்டுத் தொடர்பும் உடையன. பாரதப்போரில் மூவேந்தரும் கலந்து கொண்டனர். கண்ண பிரான் குமரிநாட்டினின்று வடநாடு சென்ற ஆயர் குடியினரே.

இராமாயணக் காலத்திலேயே தமிழெழுத்தினின்றும் திரிந்த ஒருவகை வடவெழுத்துத் தோன்றியிருக்குமேனும், வேதமந்திரங்கள் நெடுங்காலம் எழுதாக் கிளவியாகவே இருந்து வந்தன. அதற்குக் கரணியங்கள் ஐந்து, அவையாவன :

(1) கால முன்னேற்றத்திற் கேற்றவாறு சில கருத்துகளையுஞ் சொற்களையும் மாற்றிக்கொள்ள இடந்தருதல்.

(2) மறைவாயிருக்கும் வரை, பழங்குடி மக்களிடை ஓர் உயர்ந்த தெய்வீக மதிப்பை உண்டுபண்ண இயலுதல்.

(3) எல்லார்க்கும் பொதுவாகாது ஒரு வகுப்பார்க்கேயுரிய பிழைப்புக் கருவியாயிருத்தல்.

(4) பலுக்கத் தெரியாத பொதுமக்கள் வாய்ப்பட்டு ஒலியுஞ் சொல்லும் சிதையாமற் காத்தல்.

(5) தெளிவு பெற்ற மக்களின் எள்ளலாலும் இகழ்ச்சியாலும் மந்திர ஆற்றல் கெடுவதைத் தடுத்தல்.

பாரதப் போருக்குப்பின் ஆரியப் பூசாரியர்க்குத் தமிழரொடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதனால், தமிழரின் தெய்வவுயர்வையும் மதவுயர்வையும் வழிபாட்டு யர்வையுங் கண்டு அவற்றைத் தழுவி, இறைவனின் முத்தொழி லையும் வெவ்வேறு பிரித்து, படைப்பிற்குப் பிரமா என்னும் ஒரு