பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ மதங்களை ஆரிய வண்ணமாக மாற்றியபின் அதற்குச் சான்றாகவும் சார்பாகவும் பின்வருமாறு பதினெண் புராணங்கள் புனையப்பட்டன:

சிவபுராணம் (10)

சைவ புராணம், பவிடிய புராணம், மார்க்கண்டேய புராணம், இலிங்க புராணம், காந்த புராணம், வராகபுராணம், வாமன புராணம், மச்சபுராணம், கூர்மபுராணம், பிரமாண்டபுராணம்.

விண்டு (மால்) புராணம் (4) :

பிரம புராணம் (2)

அக்கினி புராணம் (1)

சூரிய புராணம் (1)

வைணவ புராணம், காரு

புராணம், நாரதீய புராணம், பாகவத புராணம்.

பிரம புராணம், பதும புராணம்.
ஆக்கினேயம்.
பிரமகைவர்த்தம்.

இவற்றின்பின், உப புராணங்கள் என்னும் 18 துணைப் புராணங்கள் எழுந்தன. அவையாவன :

சனற்குமாரம், நரசிங்கம், நந்தி, துருவாசம், சிவதருமம், நாரதீயம், காபிலம், மாணவம், ஒளசனம், வாசிட்டலைங்கம், வாருணம், காளிகம், சாம்பேசம், அங்கிரம், சௌரம், பராசரம், மாரீசம், பார்க்கவம்.

சிவனியம் மாலியம் என்னும் இருவேறு தமிழ மதங்களையும் பிரம வணக்கம் என்னும் ஆரியப் புனை மதத்தையும் ஒன்றாக இணைத்த முத்திருமேனிக் கொள்கை, செயற்கைப் புணர்ப் பேயாதலால், அதற்குச் சான்றாகப் புனையப்பட்ட பதினெண் புராணமும் கட்டுச் செய்தியே என்பதைச் சொல்ல வேண்டு வதில்லை.

ஆரியப் பூசாரியர் தமிழகம் வந்தபின், தமிழ்ச்சொற்களை ஏராள மாகக் கையாண்டும், அவற்றினின்று நூற்றுக்கணக்கான நுண்பொருட் சொற்களைத் திரித்துக் கொண்டும், சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியைப் பெருவளப்படுத்தி, தமிழ் நூல்களை யெல்லாம் ஒவ்வொன்றாக அதில் மொழிபெயர்க்கத் தாடங்கினர். அன்று தமிழ் முத்தமிழாக வழங்கியதனால், முதற்கண் இசைநாடகங்களை மொழி பெயர்த்தனர். “தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன. நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன” என்று அடியார்க்கு