பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

231

நல்லார் கூறுவதால், ஆரியப் பூசாரியர் சமற்கிருதத்தில் மொழி பெயர்க்கு முன், தமிழில் வழிநூல்கள் இயற்றித் தமிழரின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது.

தமிழர் முற்றும் ஆரியர்க்கு அடிமைப்பட்டுப் போனபின், மனுதரும சாத்திரம் போன்ற குலவொழுக்க நூல்கள் எழுந்தன.

வடநாட்டில் தமிழ் மறைக்கப்பட்டுப் போனமையால், தமிழ் திரவிடப் புலவரும் பாவலரும் சமற்கிருதத்திலேயே பனுவல்களும் பாவியங்களும் பாடவும் நூல்களியற்றவும் நேர்ந்துவிட்டது. கி. மு. முதல் நூற்றாண்டு போல் இடைக் குடியிற் பிறந்து அல்லது வளர்ந்து இயற்கையாகவே பாவன்மையும் படைப்புத்திறனும் வாய்ந்த காளி தாசன் என்னும் பாவரையர் பாடியவற்றுள், இருதுசம்மாரம், குமார சம்பவம், மேகசந்தேசம், இரகுவமிசம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், சாகுந்தலம்

என்பன உலகப் புகழ்பெற்றன.

இங்ஙனம் மொழிபெயர்ப்பாகவும் புதுப்படைப்பாகவும் மேன்மேலும் நூல்களும் பனுவல்களும் தோன்றி, இன்று இந்தியாவிற் சமற்கிருத இலக்கியமே வியன் பரப்புள்ளதாகவும் இந்தியக் கலைகளெல்லாவற்றையும் தழுவினதாகவும், உள்ளது.

எல்லாக் கலைகளையும் ஆரியப் பூசாரியர் 64ஆக வகுத்தனர்.

அவ் வகுப்பு அறிவியன் முறைப்பட்டதன்று.

சமற்கிருதத்திலும் வேதமொழியிலும் சில சிறுதெய்வ வழுத்துத் தவிர வேறொன்று மில்லாதிருந்தபோது, பல்வேறு கலையும் நூலும் பற்றிப் பல்லாயிரம் ஏட்டுச் சுவடிகளையும் பொத்தகங்களையும் கொண்டிருந்த தமிழ், ஆரியரழிப்பி னாலும் தமிழர் புறக்கணிப்பினாலும், படிப்படியாகத் தாழ்ந்தது. இன்று திரவிடமொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிலையில் உள்ளது.

ஆரிய மொழிபெயர்ப்பு நூலெல்லாம் மூலமாகவும் தமிழ் முதனூலெல்லாம் படியாகவும், தோன்றுகின்றன.

முதற்கண் அகத்தியத்திற்கு முந்திய ஆயிரக்கணக்கான தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன; அதன்பின், கிறித்துவிற்கு முந்தின இடைக்கால நூல்களுள், தொல்காப்பியமும் திருக்குறளுந் தவிர, ஏனைய வெல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. பின்னர்க் கிறித்துவிற்குப் பிற்பட்ட லக்கண விலக்கியப் புலவியத்துள்ளும் பெரும்பகுதி, இறந்து பட்டது.