பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

தமிழ் இலக்கிய வரலாறு

நில முழுக்கால் உலகவழக்குச் சொற்களும், இலக்கிய அழிவாற் செய்யுள் வழக்குச் சொற்களும், ஆயிரக்கணக்கானவை அழிந் தொழிந்தன.

பிற நாடுகளிலில்லாத புறப்பகையும் அகப்பகையும் ஒன்று சேர்ந்ததனால், தமிழரே தமிழைப் பழிக்கும் நிலைமை யேற்பட்டு, சமற்கிருதம் வளரவளரத் தமிழ் தளர்ந்துவிட்டது.

புலவரைப்

புரப்பாரும் போற்றுவாரும் நூல்களைக் கற்பாரும் காப்பாருமின்றி, சிதலரித்தும், அடுப்பிலெரிந்தும், குப்பையில் மக்கியும், பதினெட்டாம் பெருக்கில் எறியுண்டும், கணக்கற்ற ஏட்டு நூல்கள் மீளாநிலையடைந்தபின், எஞ்சிய தொல்காப்பியமும் பதினெண் மேற்கணக்கும் கழக மருவிய வனப்புகளும் இருந்தவிடந் தெரியாமற் கரந்து கிடந்தன.

5. ஆரியத்தால் ஏற்பட்ட இலக்கண விலக்கிய மாற்றமுங் கேடும் தொல்காப்பியம்

வாரணன் தமிழரின் கடல் தெய்வம். வருணன் ஆரியரின் மழைத் தெய்வம். வாரணன் என்பது இறந்துபட்டுள்ளது.

தமிழ அந்தணர்க்குத் தூதிற் பிரிவேயன்றி ஓதற் பிரிவில்லை. மணத்தின்பின் இல்லறம் நடத்துவதும், உயர்கல்வி கற்பின் வாழுமூரிலேயே அல்லது மனைவியுடன் கூடி வாழ்ந்தே, கல்வி கற்பதும், தமிழர் மரபு; மணந்தபின் தொலைவிலுள்ள L குரு குலத்திற்குத் தனித்துப் போய் மூவாண்டு கல்வி கற்பது ஆரிய மரபு. தமிழிலக்கியப் பாகுபாடு

பாட்டு, உரை, நூல், வாய்மொழி அல்லது மந்திரம், பிசி டுகதை), அங்கதம் (எதிர்நூல்), முதுசொல் (பழமொழி) என்று செய்யுளை எழுவகையாய் பகுப்பதும், அவற்றுட் பாட்டை எண் வனப்பாக வகுப்பதும், பண்டைத் தமிழமுறை.

பெருங்காவியம் சிறுகாவியம் என்றும், 96 பிரபந்தங்கள் என்றும், இலக்கியப் புலவியம் இக்காலத்திற் பகுக்கப் பட்டுள்ளது. காவியத்தைப் பாவியம் என்னலாம். கவியினாற் செய்யப்படுவது காவியம். கவி என்னுஞ் சொல்லிற்குக் ‘கூ' என்பது வேராகக் காட்டப்பட்டுள்ளது. கூதல் ஒலித்தல், குரலிடுதல். அது கூவு என்னுஞ் சொல்லின் மறுவடிவான அல்லது மூலமான தூய தென்சொல்லே. பிரபந்தம் தமிழிற் பனுவல் எனப்படும்.

=