பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

தமிழ் இலக்கிய வரலாறு

இன்று தமிழர்க்கும் மறைகளாகக் காட்டப்படுகின்றன. அதனால் மறையெழுத்துகளும் ஐம்பத்தொன்றென்பர்.

CC

'ஒதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும் ஆதி யெழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்”

(திருமந். 942)

திருமூலர் ஆரிய ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு ஓதுவதால், “என்பர்” என்று பிறர் கூற்றாகக் குறித்தல் காண்க. இதையறியாது, துடிசைகிழார் அ. சிதம்பரனார் “திருமூலர் காலத்தில் தமிழ் மொழியில் உயிர் 16 உண்டு என்பது இதனால் அறிகின்றோம்", என்று குறிப்புரை வரைந்துள்ளார். இது அவரது தமிழ்ப்பற்றையே காட்டுகின்றது.

6. இறந்துபட்ட தமிழ் நூல்கள் பெயர் தெரிந்தவை

i. இலக்கியம்

(1) இயற்றமிழ்

அகத்திணை, அசதிக்கோவை, அஞ்சனகேசி, அட்டாதச புராணம், அண்ணாமலைக் கோவை, அந்தாதிக் கலம்பகம், அந்தாதி மாலை, அமிர்தபதி, அரசச்சட்டம், அரும்பைத் தொள்ளாயிரம், அரையக் கோவை, அவிநந்தமாலை, அளவை நூல், அறம்வளர்த்த முதலியார் கலம்பகம், அறிவுடை நம்பியார் சிந்தம், ஆசிரிய மாலை, ஆயிரப் பாடல், ஆரிய படலம், இசையாயிரம், இராசராச விசயம், இராமாயண வெண்பா, இராமீசுரக் கோவை, இரும்பல்காஞ்சி, இளந் திரையம், இறை வானறையூர்ப் புராணம், இன்னிசைமாலை, ஈங்கோய் எழுபது, உன்னியம், ஊசிமுறி, எண்ணூல், எதிர்நூல், எலிவிருத்தம், எழுப் பழுபது, ஏரம்பம், ஐந்திணை, ஓவிய நூல்,

கச்சிக் கலம்பகம், கண்டன் கோவை, கண்டனலங்காரம், கலி, கலியாணன் கதை, கலைக்கோட்டுத் தண்டு, களிப்பெழுபது, கன்னிவன புராணம், காங்கேயன் நாலாயிரக் கோவை, காங்கேயன் பிள்ளைக் கவி, காசியாத்திரை விளக்கம், காரிக் கோவை, காரிகைச் செய்யுள், காரைக் குறவஞ்சி, காலகேசி, கிளவித் தெளிவு, கிளவி மாலை, கிளவி விளக்கம், கிளிவிருத்தம், குண்டலகேசி, குண நாற்பது, குமார சேனாசிரியர் கோவை, குருகு, குலோத்துங்கச் சோழ சரிதை, கோட்டீச்சுரவுலா, கோயிலந்தாதி, கோலநற்குழல் பதிகம்,

சங்க காலப் பாரதம், சதகண்ட சரித்திரம், சாதவாகனம், சாந்திபுராணம், சித்தாந்தத்தொகை, சிற்றெட்டகம், சூத்திரக