பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

66

'ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக மாவீரம் புலர்வதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ளவெண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே".

நிசகுணயோகி

241

இவர் விவேகசிந்தாமணி என்னும் இன்னோசை யெளி நடை யொழுகிசை அறநெறிப் பாமாலை பாடியுள்ளார்.

கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்

இவர் கோடீசுரக் கோவை முதலியன பாடியுள்ளார். இளையாற்றங்குடி முத்தப்பச் செட்டியார்

வர் செயங் கொண்டார் சதகம் பாடியுள்ளார்.

திருவானைக்காத் தில்லைநாயக சோதிடர்

இவர் சாதக சிந்தாமணி பாடியுள்ளார்.

தாண்டவராய முதலியார்.

இவர் 1824-ல் பஞ்சதந்திரத்தை மராட்டியினின்று மொழி பெயர்த்தார்.

விசாகப் பெருமாளையர்

இவர் சென்னை

மாகாண அரசியலார் கலாசாலைத்

தமிழாசிரியராயிருந்து, உவின்சிலோ அகரமுதலித் தொகுப் பிற்குத் துணைபுரிந்தார். இவர் எழுதியவை நன்னூற் காண்டிகை யுரை, யாப்பணியிலக்கண வினாவிடை முதலியன.

சரவணப் பெருமாளையர்

வெங்கைக்

இவர் இராமானுச கவிராயரின் மாணவர்; கோவை, பிரபுலிங்கலீலை, நைடதம் முதலியவற்றிற்கு உரை வரைந்தார்.

நாகநாத பண்டிதர் (1826-54)

இவர் மேகதூதம், பகவற்கீதை,

இதோபதேசம்,

சாந்தோக்கிய உபநிடதம் என்பவற்றை வடமொழியினின்று தமிழில் மொழிபெயர்த்தார்.