பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

கோபாலகிருட்டிண பாரதியார்

243

இவர் பொதுமக்கட் கேற்றவாறு இனிய மெட்டு களமைத்து எளிய நடையில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடியுள்ளார். ஆறுமுக நாவலர் (1823-79)

L

உரை,

சேனாதிராயர், சரவணமுத்துப்பிள்ளை ஆகிய இருவரின் மாணவரும், பொன்னம்பலம் பிள்ளை, சபாபதி நாவலர் ஆகிய இருவரின் ஆசிரியருமான யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், கன்னித் துறவியா(நைட்டிகபிரமசாரியா)யிருந்து, தமிழகத் திலும், யாழ்ப் பாணத்திலும் தமிழையும் சிவநெறியையும் காலமெல்லாம் கருத்தாய்ப் போற்றிக்காத்த அரும்பெருந் தொண்டர்; சென்னை யில் தாம் நிறுவிய வித்தியாநுபாலன இயந்திர சாலையில், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையார் சேனாவரையம், பிரயோகவிவேகம், கந்த புராணம், சேது புராணம், பாரதம், சைவசமய நெறி, தருக்க சங்கிரகம் முதலிய நூல்களையும் பனுவல்களையும் அச்சிட்டார்; சிறுவர்க்காக 4 பால பாடப் பொத்தகங்களையும் 2 சைவ வினாவிடைச் சுவடிகளையும் இலக்கணச் சுருக்கத்தையும்; புலவரல்லாதவர்க்குப் பயன்படும் பொருட்டுப் பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கந்தபுராண வசனம், சிதம்பர மான்மிய வசனம் முதலிய உரைநடைப் பொத்தகங்களையும், கோயிற் புராண வுரையையும்; மாணவர்க்குதவுமாறு நன்னூற் காண்டிகை, இலங்கைப் பூமி சாத்திரம் முதலியவற்றையும் எழுதி வெளியிட்டார். செந்தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு, அவர் உரைநடை நூல்களே சிறந்த முறையில் அடிகோலின.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836-84)

இவர் பழனியில் தட்டாரக் குடும்பத்திற் பிறந்து, மூன்றாம் அகவையில் அம்மை நோய்வாய்ப்பட்டுக் கண்ணிழந்து, இறைவனருளால் அந்தகக்கவி வீரராகவர் போல் இலக்கண விலக்கியங்களை யெல்லாம் கேள்வியாற் கற்றுத் தேர்ந்து, காளமேகம் போற் கடும்பாவும், நெடும்பாவும் தட்டுத்தடை யின்றிப் பாடவல்லவராய், முத்துராமலிங்க சேதுபதியிடம் கவிச்சிங்க நாவலர் என்னும் பட்டம் பெற்று, சரசுவதியம்மன் பஞ்சரத்தினம், சந்தப்புகழ் பழனிப்பதிகம், குமரகுருபதிகம், சிவகிரிப்பதிகம், திருச்செந்திற் பதிகம், பழனிநான் மணிமாலை, பதிகம்,பழனிநான் திருப்பழனி வெண்பா, பழனி வெண்பா வந்தாதி, பழனா புரிமாலை, குமரனந்தாதி, சிவகிரிய மகவந்தாதி, பழனிக் கோயில் விண்ணப்பம், தயாநிதிக் கண்ணிகள், ஆனந்தகீத துதிப்பாசுரத் தொகை, சென்னராயப் பெருமாள் திருப்பதிகம் சிங்கார ரசமஞ்சரி, இசைப்பாடல்கள், சந்திர விலாசம், தனிச்செய்யுட் கோவை என்னும் பல்வகைப் பனுவல்களைப் பாடியுள்ளார். அவையெல்லாம் அக்கால வழக்கப்படி கலவைத் தமிழ்நடையிலுள்ளன.

ரசம்