பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

35

செய்வது தமிழ மருத்துவம். அதன் தலைசிறந்த மருந்து இரும்பு செம்பு முதலிய பொன்னங்களைத் தூய பொன்னாக்குவதும், கழிநெடுங்காலம் (1,00,000 ஆண்டு ?) வாழச் செய்வதுமான முப்பு (மூவுப்பு) என்னும் ஒருவகைக் கலவையுப்பு. அது செய்யும் வகை மறையுண்டு போயிற்று.

மதவியல்

குறிஞ்சிநிலத்திற்குரிய சேயோன் (முருகன்) வணக்கத் தினின்று சிவனியமும், முல்லைநிலத்திற்குரிய மாயோன் (கரியவன், மால்) வணக்கத்தினின்று மாலியமும், ஆகிய பெருந்தேவ மதம் இரண்டும் வளர்க்கப்பட்

ஓகப்பயிற்சியாலும்

ன.

உள்ளத்தூய்மையாலும் எண்ணத் திண்மையாலும் இறைப்பற்றாலும் நுண்மை, பருமை, நொய்ம்மை, கனதி, கருதியது பெறுதல், கருதியவிடஞ் செல்லுதல், கருதிய வடிவெடுத்தல், கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஆகிய எண்வகைப் பெற்றிகளைப் பெற்ற பெற்றியர் (சித்தர்), இரு பெருந் தேவ மதத்திற்கும் பொதுவான கடவுள் மதத்தைக் கண்டனர். கடவுள் மதமாவது, காலம் இடம் வடிவு குணம் முதலிய எல்லாவற்றையுங் கடந்து இயல்பான முற்றறிவும் முழுவல்லமையுமுள்ள ஒரு தனிப் பரம்பொருளை, உள்ளத்தில் தொழுதல்.

குமரிநாட்டுத் தமிழர் இங்ஙனம் உலகியலிலும் மதவிய லிலும் உயர்நிலையடைந்திருந்ததற்குக் கரணியம், அவர் நெற்றியிற் பெற்றிருந்த ஒருவகை அறிவுக்கண் என்றும், அது கண்ணாற் காணாததைக் காணவும் காதாற் கேளாததைக் கேட்கவும் வல்லது என்றும், அதைப் பின்னோர் நெடுங்காலம் பயன்படுத்தாமையால் அதை இழந்துவிட்டனர் என்றும், ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். இக் கருத்தை. சிவ பெருமானுக்கு நெற்றிக்கண் உண்டென்னுங் கூற்று ஓரளவு வலியுறுத்துகின்றது.

வேளாளர் பண்பாடு

பண்பாடு

புதிதாக இல்லத்திற்கு வந்தவர்க்கும் வழிச் செல்லும் அயலார்க்கும் சிறந்தவுணவளிப்பதும், இரப்போர்க்கு இல்லை யென்னாது ஈவதும், வேளாளர் பண்பாடு.