பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வணிகர் பண்பாடு

தமிழ் இலக்கிய வரலாறு

பொருள்களை வாங்கும்போது அளவைக் கூட்டிப் பெறாமலும், விற்கும்போது குறைத்துக் கொடாமலும், நேர்மை யாக வணிகஞ் செய்வதும்; உறுப்பிலிகட்கு ஊட்டுப் புரையும், அயலார் தங்கச் சத்திரஞ் சாவடியும், கட்டி வைப்பதும்; வழிப் போக்கர்க்குச் சோலையொடு கூடிய குளம் வெட்டி வைப்பதும்; நீர்நிலையில்லாக் காட்டு வழிகளில் நெல்லி மரங்கள் வளர்த்து வைப்பதும் வணிகர் பண்பாடு.

அரசர் பண்பாடு

காட்சிக் கெளியராயும் கடுஞ்சொல்ல ரல்லராயுமிருப் பதும், நடுநிலையாக முறைசெய்து செங்கோலாட்சி செலுத்து வதும், வழக்கிழந்தவர் தம்மிடம் முறையிட அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டிவைப்பதும், வறட்சிக் காலத்தில் வரி நீக்குவதும், திருநாள் பெரு நாள்களில் சிறைஞரை விடுதலை செய்வதும், மதம்பற்றிய உண்மையை மக்களறிதற்குப் பட்டிமன்றம் நடத்துவதும், கூனர் குறளர் முதலிய எச்சப் பிறவிகளை அரண்மனைக் குற்றேவற் கமர்த்துவதும், போர் தொடங்குமுன் பெண்டிர் பிள்ளைகள் பிணியாளர் முதியோர் முதலியோரைப் பாதுகாப்பான இடத்திற்கு அகற்றிவிடுவதும் படைக்கலமிழந்தவனும் எளிய படைக்கலமுள்ளவனும் கீழே

விழுந்தவனும் முடிகுலைந்த வனும் ஆடையவிழ்ந்தவனும் தோற்றோடுகின்றவனும் ஆகியோர் மீது படைக்கலம் ஏவாமையும், தோற்ற அரசனைத் திறைகட்டச் செய்து அவனொடு மணவுறவு கொள்வதும், போரில் முதுகிற் புண்பட்ட போதும் வாழ்க்கையில் மானங் கெட நேர்ந்தபோதும் உண்ணாநோன்பிருந்து உயிர்துறப் பதும், அரசர் பண்பாடாம்.

புலவர் பண்பாடு

அரசர் மதியாது தரும் பரிசிலைப் பெறாது போவதும், வறுமையிற் செம்மையாய் ஒழுகுதலும், பேராசையின்மையும், அரசர் தீங்குசெய்யின் தடுப்பதும், அவர்க்கு அஞ்சாது அறிவுரை கூறுவதும் பொதுநலம் பேணுவதும், சொற் பொழிவரங்கிற்குச் செல்லின் இறுதிவரையிலிருந்து கேட்பதும் புலவர் பண்பாடாம். 8. குமரிநாட்டு இலக்கியம்

இலக்கியம் (1) எழுதப்பட்ட இலக்கியம், (2) எழுதப்படா இலக்கியம் என இருவகைப்படும். எழுதப்பட்ட இலக்கியமும்,