பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

(1)

37

உரைநடையிலக்கியம் (2) செய்யுளிலக்கியம் என்றும், (1) பொதுவிலக்கியம் (2) சிறப்பிலக்கியம் என்றும், நடை பற்றியும் பயன்படுத்தும் மக்கள்பற்றியும் இவ்விரு வகைப்படும்.

குமரிநாட்டுத் தமிழிலக்கியம், நடைபற்றிச் செய்யுளிலக் கியமும் பயன்படுத்துவார்பற்றிப் பொதுச்சிறப்பிலக்கியமு மாகும். பொதுவிலக்கியம்

பாட்டு, உரை, நூல், வாய்மொழி அல்லது மந்திரம், பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலைக்களத்திற் செய்யுளிலக்கியம் தோன்றிற்று. நிலைக்களம் யாப்பு வகை,

அவற்றுள் : பாட்டு எண்வகை வனப்பாகப் பகுக்கப் பட்டது. எண்வகை வனப்புகள்

1. அம்மை

"சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் பின்றே.

(தொல்.செய்.233)

2. அழகு

"செய்யுள் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே.

(தொல்.செய்.234)

3. தொன்மை

"தொன்மை தானே

99

உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே.

(தொல். செய்.235)

4. தோல்

"இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் தோல்என மொழி தொன்மொழிப் புலவர்.

5. விருந்து

'விருந்தே தானும்

புதுவது கிளந்த யாப்பின் மேற்றே."

6. இயைபு

66

99

(தொல்.செய்.236)

(தொல்.செய்.237)

'ஞகார முதலா னகார வீற்றுப்

புள்ளி யிறுதி இயைபெனப் படுமே.

(தொல்.செய்.238)