பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை விருந்து

என்பது,

39

அவ்வப்போது புதிதுபுதிதாகத் தோன்றும் பல்வகைப் பனுவல்கட்கும் பொதுப்பெயர். தொல்காப்பியத் தில் விருந்துப் பனுவலென்று ஒன்றும் விதந்து குறிக்கப் பெறவில்லை.

66

"குழவி மருங்கினுங் கிழவ தாகும்

99

என்பது பிள்ளைத்தமிழ் என்னும் பனுவலையும்,

CC

99

(தொல். புறத்.29)

'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப (தொல். புறத். 30) என்பது உலா அல்லது ஊரின்னிசையையும் குறிக்கலாம்.

உரை என்பது, விளங்காத நூன் மூலத்திற்குப் பொருள் கூறுவது. அதுவுஞ் செய்யுளாகவே இயற்றப்பட்டது; ஆயின், ‘அல்லியரசாணிமாலை', ‘பவளக் கொடிமாலை' என்பன போல எளிய நடையில் அமைந்திருந்தது. உரைநடையில் இருக்க வேண்டிய உரையும் செய்யுளில் இயன்றமை, அக் காலத்துத் தமிழ் மக்களின் செய்யுள் திறத்தைச் சிறப்பக் காட்டும்.

நூல் என்பது அறிவியல். இலக்கணம் ஓர் அறிவியல். ஒவ்வொரு கலையிலும் தெரிவியல் (Theory) பற்றியதெல்லாம் இலக்கணம் போன்ற அறிவியலே.

வாய்மொழி அல்லது மந்திரம் என்பது

திருமந்திரம் போல்வது.

திருமூலர்

மி.

மந்திரம் என்பது தூய தென்சொல்லே. முன்னுதல் கருதுதல், எண்ணுதல். முன்-மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ: மன் - மன்று - மந்து - மந்தை = கூட்டம். இன்னது நிறைவேறும் அல்லது உண்மை என்று எண்ணும், எண்ணத்திண்மையொடு அல்லது மன வலிமையொடு கூடிய நிறைமொழியே மந்திரம்.

-

பிசி யென்பது விடுகதை.

அங்கதம் என்பது கண்டனநூல் அல்லது மறுப்புநூல். அது எதிர்நூல் எனவும்படும்.

முதுசொல் என்பது பழமொழி.

பாட்டுப் போன்றே, ஏனை யறுவகை யாப்புச் செய்யுளும் இன்றில்லை. பண்ணத்தி யென்னும் ஒருவகை யாப்பும் இன்றில்லை. எழுவகை யாப்பும் வெண்பா, அகவற்பா