பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தமிழ் இலக்கிய வரலாறு

(ஆசிரியப்பா), கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் தூய பாக்களும், மருட்பா, பரிபாடல் என்னும் கலவைப் பாக்களும் ஆகிய அறுவகைப் பாக்களால் இயன்றன.

பாக்கட்குரிய வண்ணங்கள் : பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என இருபது.

வண்ணம், சித்திரம் என்பன தென்சொற்களே.

வள்ளுதல் = வளைத்தல், வளைத்தெழுதுதல். வள்-வண்- வண்ணம் = எழுதும் எழுத்து அல்லது வரையும் படம் எழுத்தின் நிறம், நிறம் போன்ற செய்யுளொலி வகை, வகை.

வள்-வர்-வரி-வரணம் = எழுத்து, நிறம், வகை, வகுப்பு, இசைப்பா வகை.

ஒ.நோ

திரணை.

திள்-திண்-திண்ணை. திள்-திர்-திரள்-திரளை-

செத்தல் = ஒத்தல். செ + திரம் = செத்திரம் - சித்திரம் = ஓவியம். ஒ.நோ : செந்திரம் - சிந்துரம் சிவப்பு, செந்தூள், செந்நீறு,

செம்பொறிமுக யானை.

தொல்காப்பியர்

=

காலத்திற்கு முந்திய அறுவகைப் பாக்கட்கும், இருபது வண்ணங்கட்கும், நூற்றுக்கணக்கான அகப்பொருள் புறப்பொருள் துறைகட்கும், இன்று எடுத்துக் காட்டில்லை. எல்லாம் அழிக் கப்பட்டு விட்டன.

இசையும் நாடகமும்

சிறப்பிலக்கியம்

தொல்காப்பியத்திற்கு

முத்தமிழிலக்கணம்.

முந்தியது அகத்தியம். அது

"இலக்கிய மின்றி இலக்கண மின்றே எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே எள்ளினின் றெண்ணெ யெடுப்பது போல இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம்.

(அகத்.)