பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

“இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலின்

என்றார் பவணந்தியார்.

41

99

(நன். 141)

அகத்தியம் முத்தமிழிலக்கணம் என்பதால், இயற்றமி ழிலக்கியம் போன்றே இசைத்தமிழ் நாடகத் தமிழிலக்கியங் களும் அவ் விலக்கண நூற்கு முன்பிருந்திருத்தல் வேண்டு மென்பது பெறப்படும். அகத்தியம் தொல்காப்பியத்திற்குச் சிலபல நூற்றாண்டு முந்தியதேனும், இடைக் கழகத்திற்குப் பிற்பட்ட தென்பதை அறிதல் வேண்டும்.

66

99

"அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். "தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. என்பவற்றால் இன்னிசையிலக்கியமும்,

(தொல். எழுத்து 33)

99

(தொல். அகத். 18)

"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

என்பதனால்

நாடகவிலக்கியமும்,

(தொல். அகத். 53)

குமரிநாட்டிலிருந்தமை

அறியப்படும்.

கணக்கு

“ஐ அம் பல் என வரூஉம் இறுதி

அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்

99

(தொல். புள்ளி. 98)

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குவளை, தாமரை, சங்கம், வெள்ளம், ஆம்பல் என்னும் மாபேரெண்கள் குறிக்கப் பட்டுள்ளன.

சங்கம் = இலக்கங் கோடி

=

தாமரை = கோடா கோடி

“இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர்

வழங்கியன் மாவென் கிளவி தோன்றின்

99

(தொல். குற்றிய. 76) என்னும் தொல்காப்பிய நூற்பா மா என்னும் அளவைக் குறிப்பதால், கீழ்வாயிலக்கத்தைச் சேர்ந்த ஏனையளவுகளும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழங்கின வென்றே

கொள்ளப்படும்.