பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

=

51

மாட்ட + ஆடு = மாட்டாடு. ஒ. நோ : சொல்லாடு, உரையாடு. தெ. மாட்டலு (பன்மை) + ஆடு = மாட்டலாடு. த. கள் (பன்மையீறு)- தெ.களு-கலு-லு கள்ளுதல் = கலத்தல், கூடுதல். கள்-களம் = கூட்டம், அவை. கூடுதலைக் குறிக்கும் சொல், பல பொருட் கூட்டமாகிய பன்மையையுணர்த்துங் குறியாயிற்று.

தெ. மாட்டு-க. மாத்து, மாத்தனு. மாத்து + ஆடு = மாத்தாடு, மாத்தனு + ஆடு = மாத்தனாடு.

௧. மாத்து. கோ. மாந்து, மாந்த் = சொல், மொழி.

௧. =கன்னடம். கோ.

=

கோத்தம் ( கோத்தர் மொழி)

பிராகுவீச் சொல்: பாக் = வாய்கள்.

த. வாய்- பி. பா. த. கள்-பிக்

வடநாட்டுத் திரவிடருள் ஒரு சாராரே, வடமேற்கிற் சென்று சுமேரிய நாகரிகத்தைத் தோற்றுவித்தனர்.

கி. மு. 20ஆம் நூற்றாண்டிலிருந்த ஆபிரகாமின் ஊர், ஊர் என்றே பெயர் பெற்றிருந்தது. ஊர் என்பது பாபிலோனிய மொழியில் நகரம் என்னும் பொருளது. பண்டைத் தமிழ் நாட்டில் ஊர் என்று பெயர் பெற்றிருந்தது மருதநில மக்கள் குடியிருப்பே. நகரம் தோன்றியதும் மருதநிலமே. ஊர் என்னும் நகரம் இருந்த இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட உத்தரம்,

கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட சேரநாட்டுத் தேக்கென்று சொல்லப்படுகின்றது. ஆபிரகாம் என்னும் பெயரின் முற் பகுதியாகிய ஆப் என்பது, அப்பன் என்னும் தமிழ்ச்சொல் திரிபே. ஆபிரகாமின் பேரனான யாக்கோபு தூங்கிக் காட்சி கண் இடம், பெத்தெல் எனப்பட்டது. பெத்தெல் என்பது தேவன் வீடு என்னும் பொருளது.

த. வீடு-க. பீடு-பீட்-கா.பெத்.

த. எல் = ஒளி, கதிரவன், தெய்வம், பெத் + எல் = பெத்தெல்.

ங்ஙனம் கூட்டுச் சொல் முறைமாறி யமையவது சேமிய வழக்கு. கா. = கானானியம்.

ஆபிரகாம் காலத்தில அரபியும் எபிரேயமும் தோன்ற வில்லை. அவன் பேசினது அக்கேடியன்.

ஆதம் (ஆதாம்) என்னும் பெயர், செங்களி மண்ணில் உருவாக்கப்பட்டவன் என்று பொருள்படின் அத்தம் என்னும்