பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ்ச்சொல்லொடும், மக்களினத் தந்தை என்று பொருள் படின் அத்தன் என்னும் தமிழ்ச்சொல்லொடும், (முதல்) மாந்தன் என்று பொருள்படின் ஆதன் (ஆன்மா) என்னும் தமிழ்ச் சொல்லொடும், தொடர்புடையதா யிருக்கலாம்.

அத்தம் = சிவப்பு. அத்தி = சிவந்த பழமரம்.

ஆவி

ஏவா (ஏவாள்) என்னும் பெயர், மக்களினத்திற்கு உயிரைத் தந்தவள் என்று பொருள்படின் என்னும் தமிழ்ச் சொல்லோடும், மக்களினத் தாய் என்று பொருள்படின் அவ்வை என்னும் தமிழ்ச் சொல்லோடும் தொடர்புடையதா யிருக்கலாம்.

சுமேரிய நாகரிகத்தை வளர்த்த மக்கள் வழியினருள் ஒரு சாரார் எகிபது வழியாகவும் மற்றொரு சாரார் சின்ன ஆசியா வழியாகவும், நண்ணிலக்கடல் புகுந்து ஐரோப்பாவை யடைந்து மேலையாரியராக மாறியிருக்கின்றனர்.

பூனை எகிப்து நாட்டில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப் பட்டு வந்தபின் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்டதென்றும், அது கிரேக்கத்தில் கத்த என்றும் இலத்தீனில் கத்துஸ் என்றும் பெயர் பெற்றதென்றும், ஆரிய நாட்டினங்கள் பிரிந்து போகுமுன் அவற்றிடை அதற்குப் பொதுப் பெயர் இல்லையென்றும், சமற்கிருதத்தில். மார்கார (margara) விடால என்னும் இரு பெயர் அதற்குண் டென்றும், மாக்கசு முல்லர் கூறியிருக்கின்றார்.

பூனை தொன்றுதொட்டுத் தமிழகக் காட்டில் இயற்கை யாக வாழ்ந்து வருகின்றது. அந்நிலையில் அதற்கு வெருகு என்று பெயர். அது வீட்டிற் பழக்கப்பட்ட பின், அடிக்கடி முகம் பூசுவதால் (கழுவுவதால்) பூசையென்றும், பிள்ளைபோல் வளர்க்கப்பட்டமையால் பிள்ளை யென்றும், பகற்காலத்தில் நன்றாய்க் கண் தெரியாமையால் கொத்தி யென்றும், பெயர் பெற்றது.

பூசு-பூசை-பூனை-பூஞை. ம. பூச்ச.

பிள்ளை-தெ. பில்லி. ஒ.நோ: தள்ளை-தெ. தல்லி.

கொத்தை = குருடு, குருடன். கொத்தை

-

க. கொத்தி.

இச்சொல் குமரிநாட்டுத் தமிழிலும் வழங்கியிருத்தல்

வேண்டும்.