பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

"முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே

99

59

(புறம்.8)

என்று, குமரிநாட்டுத் தென்கோடியிலிருந்த பஃறுளியாற்றை நெடியோன் என்னும் பாண்டியனுக் குரியதாக நெட்டிமை யார் பாடியிருப்பதனாலும், பழம் பாண்டிநாடு முழுகிப் போன தென்கண்டத்துள் ளடங்கிய தென்பது பெறப்படும்.

இனி, இறையனா ரகப்பொருளுரையிலுள்ள முக்கழக வரலாறு, தலைக்கழக இருக்கையைக் குறிக்குமிடத்து, “அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை யென்ப என்று கூறியிருப்பதும், பழம் பாண்டிநாடு குமரி நாட்டின் கண்ணதென்பதற்குச் சான்றாம்.

"தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை குன்றுமலை காடுநா

டொன்றுபட்டு வழிமொழியக்

கொடிதுகடிந்து கோல்திருத்திப் படுவதுண்டு பகலாற்றி

யினிதுருண்ட சுடர்நேமி

99

முழுதாண்டோர் வழிகாவல

(புறம்.17)

என்று, குறுங்கோழியூர் கிழார் யானைக்கட் சேய் மாந்த ரஞ் சேர லிரும்பொறையைப் பாடியிருப்பதினின்று, ஒரு காலத்தில் இந்தியா முழுதும் தமிழ் பரவியிருந்தமையை உய்த்துணரலாம்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி

(சிலப். 11: 19-22) என்னும் சிலப்பதிகாரப் பகுதி, தலைக்கழகப் பாண்டியன் நாவலந்தேய முழுவதையும் ஒருதனியாயாண்டதையோ மூவேந் தருள்ளும் முதன்மையாயிருந்ததையோ, குறிக்கும்.

பாண்டவ கௌரவர் பிறந்த திங்கட்குலம் பாண்டியர் குடிக்கிளையும், இரகுராமன் பிறந்த கதிரவக் குலம் சோழர் குடிக்கிளையுமேயாகும். வடநாட்டுக் கதிரவக்குல அரசர்க்கும் தென்னாட்டுக் கதிரவக்குல அரசர்க்கும் முசுகுந்தன், செம்பி (சிபி) முதலிய முன்னோர் பொதுவாயிருத்தலை நோக்குக.

வடநாட்டிற்

சிவமதத்தையும் திருமால் மதத்தையும் பரப்பியவர் தென்னாட்டினின்று அங்குக் குடியேறிய தமிழரே.