பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

63

வைகை மதுரையைத் தென்மதுரை யென்னும் பெருவழக் கில்லை. ஆதலால், தென்மதுரை யென்பது பஃறுளி மதுரையே. "முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை

நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம் ஆம்போ ததுவூதும்

99

என்னும் பட்டினத்தடிகள் பாட்டு, சங்காகிய சங்கத்தைப் பற்றிய தேனும், முக்கழகத்தை முன்னிய தென்பது வெளிப் படை.

காலத்தால் மட்டுமன்றிக் கருத்தாலுங் கடைப்பட்ட வைகை

மதுரைப் பாண்டியரே தமிழ்வளர்ச்சிக் கழகம் நிறுவினரெனின், அவர்க்கு முற்பட்ட தலையிடைக்காலப் பாண்டியர் ஏன் கழகம் நிறுவியிரார்?

முக்கழக வுண்மையை இற்றை இலக்கியச் சான்றின்மை பற்றி நம்பாதார் பாட்டனைப் பெற்ற பூட்டனைக் கண்டிராமையால் அவன் இவ்வுலகி லிருந்ததை நம்பாதாரே.

4. முக்கழகமும் நிறுவியவர் பாண்டியரே

"மோனையாந் தெய்வத் தமிழ்மொழி நிறீஇய

சங்கத் தலைவர்கள் தலைமை பூண்டங் கறம்வள ரவையில் அரங்கே றியநாள் வழுதியர் வளர்த்தது சங்க காலம்’

99

என்பது பேரிசைச் சூத்திரம் என்னும் திரட்டில், தமிழ் மொழி விளக்கம் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு நூற்பா.

பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் (கி.பி. 9ஆம் நூற்.)

தளவாய்புரச் செப்பேடு,

66

99

'மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனி லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் என்றும், அவன் மகனான பாண்டியன் இராசசிம்மனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேடு,

99

"மகாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் ’ என்றும், முன்னோர் சயலைப் பின்னோர்மேல் ஏற்றிக் கூறுகின்றன. வைகை மதுரையைத் தென்மதுராபுரம் என்றது, கண்ணன் மதுரையை வடமதுரை யெனக் கருதியதாகல் வேண்டும்.