பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தமிழ் இலக்கிய வரலாறு ஐம்பதியாண்டு நிரவலாக வைத்துக் கணிப்பின், மொத்தம் நாலாயிரத்து நானூற்று ஐம்பதாக, பத்தாண்டு கூடியே வருதல் காண்க.

கடுங்கோன் என்பவன், களப்பாளர் (களப்பிரர்) காலத்தின் பின் பாண்டி நாட்டைக் கைப்பற்றிய கடுங்கோன் அல்லன். பெயரொப்பு மையைத் தீதாகப் பயன்படுத்தித் தமிழினத்தின் தொன்மையையும் தலைமையையும் மறைப் பதும் குறைப்பதும், தமிழ்ப் பகைவரான ஆரிய வரலாற்றாசிரி யரின் வழக்கமான குறும்பாகும். காய்சின வழுதி என்னும் பெயரினன் ஒருவனும் பிற்காலப் பாண்டியருள் இன்மை காண்க. தலைக்கழகப் பாண்டியர் எண்பத்தொன்பதின்மர் பெயரும் குறித்திருப்பின், அவரனைவரும் குமரிநாட்டின ரென்பது வெள்ளிடை மலையாகும்.

தலைக்கழக இருக்கை கடல் கொள்ளப்பட்ட மதுரை என்று தெளிவாக அடைகொடுத்துப் பிரித்திருத்தலை ஊன்றி நோக்குக.

அகத்தியம் தலைக்கழக நூலன்று. முதலிரு கழக நூல்கள் அத்தனையும் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழ் உலக முதன் மொழி. அதன் இலக்கியமும் உலக முதல் அறிவியற் படைப்பு. ஆதலால் வரலாற்றிற் கெட்டாத தொன்மைத்தது. நெடுகலும் தொடர்ந்து தமிழகப் பொது வரலாறெழுதும் வழக்கம் பண்டை நாளிலில்லை. நாடுவாரியாகவும் ஆட் சி வாரியாகவும் பகுதிபகுதியாக எழுதப்பட்ட வரலாறுகளும் வரலாற்றுச் சான்றுகளும், அவ்வப்போது நேர்ந்த போர்களில் அழிக்கப் பட்டுவிட்டன. கி.மு. 1200 போல் எழுதப்பட்ட அகத்தியமே கி. பி. 7ஆம் நூற்றாண்டில் முதற் பண்டை நூலாக இருந்ததனால், அது தலைக்கழக இலக்கண நூலாக இறையனாரகப் பொருளுரையிற் குறிக்கப்பட்டது. தலைக்கழகக் காலமோ கி.மு. 52 நூற்றாண்டுக்கு முந்தியது.

அவர் சங்கமிருந்து செய்யுள் செய்தது அல்லது நூலியற்றியது என்னாது, “அவர் சங்கமிருந்து தமிழாராய்ந் தது என்று தலைக்கழகத் திற்குங் கூறியதனால். அக் கழகத் தோற்றத்திற்கு முன்பே நல்லிசைப் புலவர் பலர் செய்யுள் செய்திருந்தனரென்பதும் அவற்றை ஆராய்வதே கழகத்தின் முதல் நோக்கமும் முதன்மையான நோக்கமு மென்பதும், அறியப்படும். இதனால் தமிழின் தொன்மையும் பண்பாடும் ஒருங்கே விளங்கும்.