பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தமிழ் இலக்கிய வரலாறு

முந்தியது இயற்ற மிழிலக்கணம் என்பதும், இயற்றமிழிலக் கணத்துள்ளும் பொருளுக்கு முந்தியது சொல்லும் சொல்லிற்கு முந்தியது எழுத்தும் ஆகும் என்பதும், ஒவ்வொரு துறையிலும் அதன் படிநிலைகளிலும் முதலும் வழியும் சார்பும் சார்பிற் சார்புமாகப் பல நூல்கள் பன்னூற்றாண்டு வழங்கிய பின்னரே, பெரும்பாலும் நிறைவான அளவை நூல் தோன்றுமென்பதும், பண்டையாசி ரியர்க்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை.

அகத்தியர்க்குத் தொல்காப்பியர் நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு பிற்பட்டவர். அகத்தியத்திற்கு அடுத்துத் தோன்றிய

இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியமாதலின்,

பிற்காலத்தார் தொல்காப்பியரை அகத்தியரின் மாணவராகக் கருதிவிட்டனர். அகத்தியரைத் தொல்காப்பியத்தில் குறிப்பாக வேனும் ஓரிடத்துங் குறிப்பிடாமையும், “என்ப”, “என்மனார் புலவர்”, “எனமொழிப" என்றும், பிறவாறும், முன்னூலா சிரியரைப் பன்மையிலேயே தொல்காப்பியர் நெடுகலுங் குறித்துச் செல்லுதலும், அவர் உடன் மாணவரான பனம் பாரனார்,

"முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்

என்றும் தம் சிறப்புப்பாயிரத்திற்

99

கூறியிருத்தலும், தொல்

காப்பியர்க்கு அகத்தியரொடு தொடர்பின்மையைத் தெளிவாகக் காட்டும். ஆயினும் நச்சினார்க்கினியர்,

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்

99

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்தை நம்பி, பகுத்தறிவிற் கொவ்வாத ஒரு கதையைக் கட்டிவிட்டார்.

அகத்தியம் இறந்துபட்டமைக்குத் தொல்காப்பியரின் எதிர்ச் சாவிப்பு கரணியமன்று. அது முத்தமிழ் முழு நூலாயிருந்து தமிழின் பெருமையைச் சிறப்பக் காட்டின தனாலும், தொல்காப்பியம் போல் ஆரியக் கருத்துகளைப் புகுத்தாமையாலும், வடசொல்லைச் செய்யுட் சொல்லாகக் கொள்ளாமையாலுமே, முதுகுடுமிப் பெருவழுதி போன்றார் காலத்தில் தமிழ்க் கடும் பகைவரான ஆரிய வெறியரால் அழிக்கப்பட்டு விட்டது.