பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

71

அகத்தியரையும் தொல்காப்பியரையும் முதலிற் குறித்த தனால் இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன் சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோன், கீரந்தை என்பவரும் பிற்காலத்தவரே.

கன்னட

துவரைக்கோன் என்றது, எருமையூர் (மைசூர்) நாடென் னும் நாட்டில் இன்று துவாரசமுத்திரம் என வழங்கும் துவரை நகரைத் தலைநகராகக் கொண்ட, இருங்கோவேளின் முன்னோன்.

கழகமிருந்தார் தொகை ஐம்பத்தொன்பதாகவும் உள்ளிட்டுப் பாடினார் தொகை மூவாயிரத்து எழுநூறாகவும் குறைந்து போனமைக்கு, பனிமலைவரை வடக்கிலுள்ளது போன்ற ஒரு பெரு நிலப்பரப்பு முழுகிப்போனமையே கரணியம்.

அவர் பாடியதாகச் சொல்லப்படும் கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலையகவலும் பிறவும் இறந்து

பட்டன. அவையும் அக்காலத்துப் பொதுவிலக்கியமே.

அவர்க்கு இலக்கண நூலென்ற ஐந்தும் இடைக்கழகத் திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவையே, மாபுராண மும் பூதபுராணமும் இறந்துபட்டன. இசைநுணுக்கம் இன்றும் கையெழுத்துப் படியாயிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆயின், அச்சேறி வெளிவராமையோடு மறைவாகவும் உள்ளது.

புராணம் என்னும் வடசொல்லே, மாபுராணமும் பூத புராணமும் ஆரியம் வழக்கூன்றிய பிற்காலத்தன வென்பதைத் தெரிவிக்கும். அதே சமையத்தில், அவை கூறும் இலக்கணச் செய்தியின் தொன்மையையும் உணர்த்தும்.

புராணம் என்னும் பெயர்

வடமொழியிலக்கியத்திற் பழங்கதை அல்லது அதுபற்றிய பனுவலையே குறிக்கும். பிற் காலத்தில் படைப்பு, துணைப்படைப்பு, மன்னூழி (மன் வந்தரம்), அரச மரபுகள், அவற்றின் வரலாறுகள் ஆகிய ஐந்தையும் பற்றிக் கூறுவதே புராணம் என்று ஒரு வரையறை செய்யப்பட்டது. அவ் வரையறைக்கு முந்தி மாபுராணமும் பூதபுராணமும் தோன்றி யிருக்கலாம்.

இடை டைக் க் கழகத்தைப் புரந்த பாண்டியர் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை ஐம்பத்தொன் பதின்மர். தலைக்கு நாற்பதாண்டு நிரவலாக வைத்துக் கொள்ளின். அவர் ஆண்ட காலம் ஈராயிரத்து முந்நூற்றறுப தாண்டாகும். முக்கழக