பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அது மூவாயிரத்தெழு

தமிழ் இலக்கிய வரலாறு வரலாற்றில் நூறாண்டென்றது, கழகமில்லாத இடைக் காலத்தையும் சேர்த்ததாகல் வேண்டும். ஏனெனின், தலைக்கழக விருக்கையை உட்கொண்ட ஒரு பெரு நிலப்பரப்பு திடுமென மூழ்கியபின், உடனடியாக ஆட்சி ஏற்பட்டிருக்க முடியாது. ஆட்சி ஏற்பட்டபின்னும், நாடு முழுதுந் தழுவிய தலைமைப் புலவர் கழகம் உடன் தோன்றியிருக்க முடியாது. ஆதலால், ஆயிரத்து முந்நூற்று நாற்பதாண்டு

டையீடு

இடை பட்டிருத்தல் வேண்டும். கடல்கோளுக்குத் தப்பிய குடிகளைக் குடியேற்றவும், புதிய அரசமைக்கவும் ஆட்சிக்கு மருதநிலத் தலைநகரும் வணிக வளர்ச்சிக்கு நெய்தல்நிலத் தலை நகரும் எடுப்பிவிக்கவும், எதிர்காலக் கடல்கோள் தடுப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், மீண்டும் புலவர் கழகந் தோற்று வித்தற்கேற்ற செழிப்பும் அமைதியும் நாட்டில் நிலவவும், அத்துணைக் கால டையீடும் வேண்டியது இயற்கையே.

வெண்டேர்ச் செழியன் முடத்திருமாறன் என்னும் பெயர்கள் பிற்காலத்துப் பாண்டியர் பெயர் போலாது தூய தமிழாயிருத்தல், ஆரிய வருகைக்கு முந்திய நிலையைக் காட்டும்.

சிலர், முடத்திருமாறன் கடல்கோளுக்குத் தப்பும் முயற்சி யில் முடம்பட்டு அப் பெயர் பெற்றானென்று கூறுவர். அவன் பிறப்பிலேயே முடம்பட்டு மிருந்திருக்கலாம்.

புலவர் தொகை போன்றே, பாண்டியர் தொகையும் அவருட் பாவரங்கேறினார் தொகையும் குறைந்தமை, பழம் பாண்டிநாடு மிகக் குறுகிப் போனமையைக் காட்டும்.

கபாடபுரம் என்னும் பெயர் வான்மீகி யிராமாயணத் தினின்று அறிந்தது. அச் சொல்லிற்கு வடமொழியில் வாயில் அல்லது கதவு என்பதே பொருள். அண்மையில் வெளிவந்த (P.S.) கிருட்டிணசாமி ஐயரின் மொழிபெயர்ப்பிலும், கபாட என்பது வாயிலின் கதவு என்றே மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. (பாண்டயாநாம் கபாடம் த்ரக்ஷ்யத = பாண்டிய நாடுகளின் உட்புகும் வாயிலின் கதவைக் காண்பீர்கள்).

ஆரிய வருகைக்கு முற்பட்ட பழம் பாண்டிநாட்டு நகருக்கு வேற்றுமொழிப் பெயர் அமைந்திருத்தல் இயலாது. கபாட என்னும் சொல்லிற்கு வடமொழியில் மூலமும் இல்லை. ஆறு, கடலொடு கலக்குமிடம் வாய் போன்றிருத்தலால், அதற்குக் கயவாய் என்று