பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இடைக்காலம்

(தோரா. கி.மு. 1500-கி.பி.1800)

1. ஆரியர் குடியமர்வுக் காலம்

(தோரா கி. மு. 1500-500)

1. ஆரியர் நாவலம் (இந்தியா) வருகை (தோரா. கி.மு. 1500)

ஆடுமாடு மேய்க்கும் முல்லைநாகரிக நிலையினரான ஆரியர் கி.மு. 1500 போல் சிறுசிறு கூட்டமாகப் பிழைப்பிடந் தேடி நாவலந் தேயத்திற்குட் புகுந்தனர். அடுத்தடுத்துப் பன்முறை வந்தாரேனும் மொத்தத்திற் பழங்குடி மக்களை நோக்கச் சிறுபான்மையரே யாதலின், அம் மக்களொடு இரண்டறக் கலந்துபோயினர். அதனால், அவர் மொழியும் அம் மக்கள் மொழியாகிய பிராகிருதத்துடன் கலந்து போயிற்று.

ஆயின், தம்மினத்துள் உயர்வையும் சிறப்புச் சலுகை களையும் பெற்று உழைப்பின்றி இன்பமாக வாழ்ந்து வந்த ஆரியப் பூசாரியர் மட்டும், பழங்குடி மக்களின் உயரிய நாகரிக த்தையும் அறிவொழுக் கங்களையும் கண்டும், அவர்களின் பேதைமை, மதப்பித்தம், LOL ம் ஆகிய குறைகளைப் உண்டாட்டிலும் கொள்வனை

காடை

பயன்படுத்திக்கொண்டு, கொடுப்பனையிலும் அவர்களொடு கலவாது தனிநின்று, தாம் நிலத்தேவரென்றும் தம் மொழி தேவமொழியென்றும் ஏமாற்றி, தாம் புகுந்த நாட்டிலும் தமக்கு உயர்வைத் தேடிக் கொண்டனர். இதற்கு அவர் வெண்ணிறமும் எடுப்பொலி மொழியும் துணை நின்றன.

எனினும், பழங்குடி மக்களெல்லாரும் அவரை நம்பிப் போற்றவில்லை. அதனாற் போற்றினாரைக்கொண்டே போற்றாதாருடன் போர் தொடுத்தனர். இக் கொலைப்போரை,