பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

75

தமிழ்நாட்டுப் பேராயக் கட்சித் தமிழர்க்கும் நயன்மைக் கட்சித் (Justice Party) தமிழர்க்கும் அல்லது திரவிடர்க்கும் இடைப்பட்ட அரசியற் கட்சித் தேர்தற் போருக்கு ஒப்பிடலாம். இரண்டும் ஆரிய திரவிடப்போரே. பிராமணர் 1937ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எங்ஙனம் தமிழரைக் கொண்டே தமிழரை வென்றனரோ, அங்ஙனமே வேதக் காலத்திலும் ஆரியப் பூசாரியர் பழங்குடி மக்களைக் கொண்டே பழங்குடி மக்களை வென்றடக்கிவிட்டனர். இதற்குத் தோதாக இருவழிகளைக் கையாண்டனர். ஒன்று சிவன், திருமால், முருகன், காளி முதலிய தமிழ் அல்லது பழங்குடித் தெய்வ வழிபாட்டை மேற் கொண்டமை; இன்னொன்று, வருணாசிரம தருமம் என்னும் பிறவிக்குலப் பிரிவினையால், பழங்குடி மக்களிடைப் படி முறைத் தாழ்வும் ஒற்றுமைக் குலைவும் தன்னின வெறுப்பும் உண்டுபண்ணியமை. இங்ஙனம் அடுத்துக் கெடுத்தல், பிரித் தாட்சி என்னும் இரு வலக்காரங்களைக் கையாண்டு, விரல்விட் டெண்ணத் தக்க ஓர் அரை நாகரிகச் சின்னஞ்சிறு வகுப்பு, நாகரிகப் பண்பாட்டிற் சிறந்த ஒரு மாபேரினத்தை நிலையாக அடக்கியாண்டு வருவதற்கு இணையானது, மாந்தன் வரலாற்றில் வேறெந்நாட்டிலு மில்லை. 2. ஆரியப் பூசகர் தென்னாடு வருகை (தோரா. கி.மு. 1200)

ரு

வேதக்காலத்திலேயே, ஆரியப் பூசாரியர்க்குத் தமிழ ரொடு கலை நாகரிகத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. தமிழத் தெய்வ வழிபாட்டை வடநாட்டுத் தமிழரிடமிருந்தே கற்றிருக் கலாம். ஆயின் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் பகுப்பிற்கு மூலமான, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நாற்பாற் பகுப்பை, தமிழர் இயற்றமிழிலக்கணப் பொருளதிகாரத்தினின்றே அறிந்திருத் தல் வேண்டும்.

என்று

பெரியவுஞ் சிறியவுமான நூற்றுக்கணக்கான தொழில் களும் தொழிற்குலங்களும் ஆரியப் பூசாரியர் வருமுன்பே ஏற்பட்டு விட்டன. எல்லாத் தொழில்களையும் உழவு வணிகம் காவல் கல்வி என்னும் நாற்பெரும் பிரிவுள் அடக்கியதும், அவற்றிற்குரிய வகுப்பாரை அந்தணர் அரசர் வணிகர் அரசர் வணிகர் வேளாளர் தலைமாற்றி வரிசைப்படுத்தியதும், ஆரிய இனத்தின் கருவுந் தோன்றாத தலைக்கழகக் காலத்திலேயே ஏற்பட்ட பொருளிலக்கண அமைப்பாகும். ஏனை நாடுகளிற் போன்றே யிருந்த தொழிற்குலங்களை, கல்வித் தொழிலினின்று விலக்கற்கும் அறியாமையுள் அமிழ்த்தி என்றும் தமக்கு அடிமைப்படுத்தற்கும், பிறவிக்குலங்களாக மாற்றியதே ஆரியப் பூசகர் தொழிலாம்.